Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

தனுசு ராசிக்கு…! செல்வாக்கு உயரும்..! திருப்தி உண்டாகும்..!!

தனுசு ராசி அன்பர்களே…!
இன்று உங்கள் உடல் ஆரோக்கியம் சீராகவே உள்ளது.

இன்று நீங்கள் எதிலும் உற்சாகமாக காணப்படுவீர்கள். சூழ்நிலைகளுக்கு ஏற்ப நீங்கள் உங்களை மாற்றிக் கொள்வீர்கள். உஷ்டமான உணவுகள் மட்டும் தவிர்ப்பது சிறந்தது. பொருளாதாரம் விரிவடைய கூடிய சூழல் உருவாகும். இன்று உங்களுக்கு செல்வம் சேரும் மற்றும் செல்வாக்கு உயரும். இன்று உங்கள் மனதில் பூர்ணமான திருப்தி ஏற்படும். உங்களுடைய நல்ல மனதிற்கு நல்லவர்கள் எப்பொழுதுமே உறுதுணையாக இருப்பார்கள்.
வாகன யோகங்கள் போன்ற ராஜ யோகங்களும் ஏற்படும். இனிய பயணங்களால் மகிழ்ச்சி கிட்டும். உங்களுடைய செயலில் திறன்களும் இன்று அதிகரிக்கும். புதிய முயற்சிகள் அலைச்சலைக் கொடுத்தாலும் லாபம் ஈட்டிக் கொடுக்கும். வெளிநாடு சம்பந்தமான பணிகளுக்கு நீங்கள் சிறிது செலவு செய்ய நேரிடும். வெளிநாட்டு துறையை சேர்ந்தவர்களுக்கு முன்னேற்றம் காணப்படுகிறது. செலவும் கொஞ்சம் இருக்கத்தான் செய்யும். ஏற்றுமதி துறை சார்ந்தவர்களுக்கு கூட முன்னேற்றம் காத்திருக்கிறது. சில முக்கிய முடிவுகள் எடுக்க கூடிய அமைப்பும் இன்று உள்ளது. விவசாயத் துறையில் உள்ளவர்களுக்கு நல்ல முன்னேற்றம் உள்ளது வரவு தானாகவே வந்து சேரும். கமிஷன் ஏஜென்சி மற்றும் கான்கிரீட் துறையில் உள்ளவர்களுக்கு கூட நல்ல லாபம் கிடைக்கும்.
உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு கூட இன்று பிரச்சினைகள் ஏதும் இல்லாமல் சுமுகமாக இருக்கும். அலுவலகத்தில் உங்களுடைய திறமை வெளிப்படும். மேலதிகாரியின் வழிகாட்டுதல் படி நடந்து கொள்வது உங்களுக்கு நன்மையை கொடுக்கும். குடும்பத்தைப் பொறுத்தவரை பிரச்சினைகள் ஏதுமில்லை. அனைத்தும் சுகமாகவே இருக்கும். கணவன் மனைவி இருவருக்கும் இடையே அன்பு இருக்கும்.
சகோதர சகோதரிகளின் ஒற்றுமை பலப்படும். இன்று நீங்கள் நினைத்தது தான் கண்டிப்பாக நடக்கக் கூடும். சிறிது முயற்சி செய்து திருமணமாகாதவர்களுக்கு வரன் தேடுவது சிறந்தது. காதலில் உள்ளவர்கள் உற்சாகமாக காணப்படுவார்கள்.‌ காதலும் கண்டிப்பாக கைகூடும்.‌ உங்களுக்கு பிரச்சினைகள் ஏதுமில்லை. மாணவ மாணவியர்களுக்கு இன்று கல்வியில் ஆர்வம் அதிகரித்து காணப்படும்.
நண்பர்கள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள். சக மாணவர்களிடம் அன்பை வெளிப்படுத்துங்கள் முன்கோபத்தை தவிர்ப்பது சிறந்தது. இன்று நீங்கள் முக்கியமான பணிகளை மேற்கொள்ளும்போது இளம்பச்சை நிறத்தில் ஆடைகள் அணிவது சிறந்தது. இளம் பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். இன்று நீங்கள் அம்மன் வழிபாடு மேற்கொள்வது உங்களுக்கு நல்ல பலனை பெற்றுக் கொடுக்கும்.

அதிர்ஷ்டமான திசை தெற்கு. அதிர்ஷ்டமான எண் 6 மற்றும் 8. அதிர்ஷ்டமான நிறம் பச்சை மற்றும் இளம் மஞ்சள் நிறம்.

Categories

Tech |