சிம்மம் ராசி அன்பர்களே..!
இன்று நீங்கள் பேசுவதில் நிதானத்தை பின்பற்ற வேண்டும்.
தொழில் வியாபாரத்தில் நிலுவைப் பணிகளை முடிப்பது நல்லது. சேமிப்பு பணம் செலவுக்கு பயன்படும். ஒவ்வாத உணவு வகைகளை உண்ண வேண்டாம். உணவு விஷயங்களில் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும். வியாபாரம் முன்னேற்றப் பாதையில் சென்றாலும், மனம் திருப்தி அளிக்காது. கடன்கள் ஓரளவு தலை தூக்கினாலும், மாலை நேரத்திற்கு பின்னர் சரியாகிவிடும். வியாபாரம் தொடர்பாக அலைய வேண்டியதிருக்கும். முழு கவனத்தை செலுத்தி எந்தவொரு வேலையிலும் ஈடுபடுங்கள். புதிய நபர்களின் அறிமுகம் நன்மையை தரக்கூடும். அவர்களிடம் பொறுப்புகளை கொடுப்பதில் கவனமாக இருங்கள். தேவையில்லாத விஷயங்களைப் பற்றி மற்றவர்களிடம் பேச வேண்டாம். யாருடைய விஷயங்களிலும் தலையிடாமல் இருப்பது நல்லது. நிதி நிலைமையை சரிபார்க்க வேண்டும். திட்டமிட்டு எதையும் செய்தால் நல்லது. வாக்குறுதிகள் ஓரளவு பூர்த்தியாகும். காரியங்களில் இருந்த தடை, தாமதங்கள் சரியாகிவிடும். கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம். மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி ஏற்படும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஊதா நிறத்தில் ஆடை அணியவேண்டும். ஊதா நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அப்படியே இன்று சனிபகவான் மற்றும் ஆஞ்சநேயர் வழிபாட்டை மேற்கொண்டு எந்தவொரு பணியையும் செய்து வாருங்கள், கண்டிப்பாக உங்களுக்கு முன்னேற்றம் ஏற்படும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு.
அதிர்ஷ்டமான எண்: 3 மற்றும் 5.
அதிர்ஷ்டமான நிறம்: ஊதா மற்றும் நீல நிறம்.