விருச்சிகம் ராசி அன்பர்களே…!
இன்றைய நாள் யோசித்து செயல்படுவதன் மூலம் யோகங்கள் வந்து குவியும்.
நல்ல விஷயங்களை ஆராய்ந்து அதற்குள் இருந்த கெட்டதை தவிர்த்துவிட்டு செயல்படுவதே சிறந்தது. இன்று உங்களுக்கு வருவாய் அதிகரித்தாலும் மனதில் மட்டும் சிறிது அமைதி குறையும். மனம் அமைதி என்பது நிறுவனத்திலேயே உள்ளது. இன்று நீங்கள் உங்கள் மன தைரியத்தை வைத்துக் கொள்வது சிறந்தது. நீங்கள் முன்கோபத்தை தவிர்ப்பது சிறந்தது. இன்று நீங்கள் உங்கள் மேல் அதிகாரிகளிடம் பொறுப்பாக நடந்து கொள்வது சிறந்தது. இன்று நீங்கள் பயணங்கள் செல்ல நேரிடும். பயணங்கள் செல்லும்போது கவனம் தேவை. கணவன் மனைவி இருவருக்கும் இடையே வீண் வாக்குவாதங்கள் அவ்வப்போது ஏற்படும். ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து செல்வது சிறந்தது. இன்று நீங்கள் உங்கள் பிள்ளைகளுடைய நலனில் அதிக அக்கறை எடுத்துக் கொள்வீர்கள். இன்றைய நாள் உங்களுக்கு ஓய்வு தேவை. இன்று உங்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும். சில காரியங்களில் தடைகள் நீங்கும், சில காரியங்களில் தடைகள் வந்து தான் பின்பு நீங்கும். இன்று உங்களுக்கு ஆன்மீகத்தில் எண்ணம் அதிகரித்து காணப்படும். இன்று ஆன்மீக பயணம் செய்யலாமா என்ற சிந்தனை ஏற்படும். நண்பர்கள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள். இன்று நீங்கள் திட்டமிட்டு செலவு செய்வதே சிறந்தது. குடும்பத்தைப் பொறுத்தவரை இன்று உற்சாகமாகவே இருக்கும். அனைவரும் உங்களை புரிந்து கொண்டு நடப்பார்கள். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் கைகூடும். இன்று உங்களுக்கு எதிலும் தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும்.காதலில் உள்ளவர்களுக்கு காதல் கைகூடும். காதலில் உள்ள சிக்கல்கள் அனைத்தும் தீர்ந்து விடும். மாணவ மாணவியர்களுக்கு கல்வியில் இருந்த தடைகள் விலகி செல்லும். மேற் கல்விக்காக முயன்று கொண்டிருக்கும் மாணவர்களுக்கு நல்ல பயன் காத்திருக்கிறது. இன்று நீங்கள் முக்கியமான பணிகளை மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடைகள் அணிவது சிறந்தது. ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். இன்று நீங்கள் சிவபெருமான் வழிபாடு மேற்கொள்வது உங்களுக்கு நல்ல பலனை பெற்றுக் கொடுக்கும்.
அதிர்ஷ்டமான திசை வடக்கு. அதிர்ஷ்டமான எண் 5 மற்றும் 6.
அதிர்ஷ்டமான நிறம் சிவப்பு மற்றும் வெளிர் நீலம் நிறம்.