தனுசு ராசி அன்பர்களே…!
இன்றைய நாள் உங்களுக்கு தொழில் மற்றும் வியாபாரம் சிறிது மந்தமாகவே இருக்கும்.
பழைய பாக்கிகள் வசூல் செய்வதில் சிறிது தாமதங்கள் ஏற்படும். கடன் பிரச்சினைகள் கூட அவ்வப்பொழுது சின்னதாக தொல்லை கொடுக்கும். புதிய ஆர்டர்களை பிடிக்கும் பொழுது உங்களுக்கு கவனம் தேவை. நீங்கள் சிக்கனமாக செலவு செய்ய வேண்டும். சில நேரங்களில் உங்களுடைய முயற்சிகள் வீணாக கூடிய வாய்ப்பு உள்ளது. இன்று நீங்கள் எதையும் பொறுமையுடன் செய்வது நல்லது. உங்களுக்கு இன்று சம்பளம் வருவதில் தாமதம் ஏற்படும். தயவுசெய்து வருமானம் வரக்கூடிய பணியை மட்டும் நீங்கள் தொடர்ந்து செய்யுங்கள். தீ ஆயுதங்களை பயன்படுத்தும் பொழுது எச்சரிக்கை தேவை. இன்று வழக்கு தீர்ப்பு உங்களுக்கு சாதகமாக முடியும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இப்பொழுது நீங்கள் பெரிய தொகையை பயன்படுத்த வேண்டாம். இன்று நீங்கள் உணர்ச்சிகரமாக பேசி மற்றவர்களை கவர்வீர்கள். பணவரவு ஓரளவு சீராக உள்ளது. பணம் கொடுக்கல் வாங்கலில் சிறிது பிரச்சினை ஏற்படும். கொடுக்கும் பொழுதும் வாங்கும் பொழுதும் நீங்கள் பணத்தை சரியாக எண்ணிப் பார்த்துக் கொள்வது நல்லது. கொஞ்சம் வெயிலில் சுற்றுவதை குறைத்துக் கொள்வது நல்லது. அதிகப்படியாக நீங்கள் தண்ணீர் அருந்துவது சிறந்தது. காதலில் உள்ளவர்களுக்கு காதல் கைகூடும். காதலில் அவ்வப்போது சிறு சிறு பிரச்சனைகள் வரவாய்ப்பு உள்ளது. தயவுசெய்து தேவையில்லாத விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டாம். மாணவர்கள் படிப்பில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும். சிறிது நேரம் ஒதுக்கி படிக்க வேண்டும் பாடத்தை படித்தபின் எழுதிப் பார்க்க வேண்டும். இன்று நீங்கள் முக்கியமான பணிகளை மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடைகளை அணிவது சிறந்தது. பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். இன்று நீங்கள் விஷ்ணு பகவான் வழிபாடு மேற்கொள்வது உங்களுக்கு நல்ல பலனை பெற்றுக் கொடுக்கும்.
அதிர்ஷ்டமான திசை தென்கிழக்கு. அதிர்ஷ்டமான எண் 2 மற்றும் 8. அதிர்ஷ்டமான நிறம் வெள்ளை மற்றும் பச்சை நிறம்.