இன்றைய பஞ்சாங்கம்
19-09-2020, புரட்டாசி 03, சனிக்கிழமை, துதியை திதி காலை 09.10 வரை பின்பு திரிதியை திதி பின்இரவு 05.39 வரை பின்பு வளர்பிறை சதுர்த்தி.
சித்திரை நட்சத்திரம் பின்இரவு 01.20 வரை பின்பு சுவாதி.
மரணயோகம் பின்இரவு 01.20 வரை பின்பு சித்தயோகம்.
நேத்திரம் – 0.
ஜீவன் – 1/2.
புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.
இராகு காலம் – காலை 09.00-10.30,
எம கண்டம் மதியம் 01.30-03.00,
குளிகன் காலை 06.00-07.30,
சுப ஹோரைகள் – காலை 07.00-08.00, பகல் 10.30-12.00, மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00.
இன்றைய ராசிப்பலன் – 19.09.2020
மேஷம்
உங்களின் ராசிக்கு உடன்பிறந்தவர்களுடன் ஒற்றுமை கூடும். தொழிலில் புதிய வாய்ப்பு கிட்டும். நண்பர்கள் ஆதரவு கிடைக்கும். தொழிலில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு லாபத்தை கொடுக்கும். தடைப்பட்ட காரியங்கள் அனைத்தும் வெற்றியை கொடுக்கும். வீட்டுத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும்.
ரிஷபம்
உங்களின் ராசிக்கு வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் மனகசப்பு ஏற்படும். சுப காரியங்களில் அனுகூலம் உண்டாகும். தேவையற்ற செலவுகளால் சேமிப்பு குறையலாம். பெரியவர்களின் ஆதரவு மிகச் சிறப்பை கொடுக்கும். நண்பர்களின் உதவியால் பிரச்சனைகள் நீங்கும்.
மிதுனம்
உங்களின் ராசிக்கு தொழிலில் வேலைப்பளு கூடும். குழந்தைகளால் பிரச்சனைகள் ஏற்படும்.தொழிலில் வேலையாட்களை அனுசரித்துச் சென்றால் அனுகூலம் கிட்டும். சிக்கனமாக செயல்பட்டால் பணம் குறை நீங்கும். தெய்வ வழிபாடு ஈடுபடுங்கள்.
கடகம்
உங்களின் ராசிக்கு உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளிடம் பாராட்டு பெறுவீர். சுபகாரிய பேச்சு வார்த்தை சுமுகமாக முடியும். ஆடம்பர பொருட்கள் வாங்க ஆர்வம் கொள்வீர். எந்த முயற்சி எடுத்தாலும் குடும்பத்தின் ஆதரவு கிடைக்கும். நண்பர்களின் ஆதரவு கிடைக்கும்.
சிம்மம்
உங்களின் ராசிக்குஎந்த காரியம் செய்யும் பொழுதும் பொறுமையுடன் செய்யுங்கள் அதுவே வெற்றி கிடைக்க வாய்ப்பாக இருக்கும்.வீட்டில் மகிழ்ச்சி நிலவ விட்டுக்கொடுத்து செல்லுங்கள் அதுவே நல்லது. சுபகாரியங்களில் மகிழ்ச்சி உண்டாகும். தொழிலில் வியாபாரிகளிடம் நட்பு உண்டாகும். கொடுத்த கடன் அனைத்தும் வசூலாகும்.
கன்னி
உங்களின் ராசிக்கு வீட்டில் சுப செலவு செய்ய வாய்ப்பு உருவாகும். உடல்நலம் சீராக இருக்கும். கணவன் மனைவியிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் அகலும். தொழிலில் பணம் சுமை ஏற்பட்டாலும் உடன் இருப்பவர்கள் பகிர்ந்து கொடுப்பார்கள்.
துலாம்
உங்களின் ராசிக்கு உறவினர்களால் சுப செலவு கூடும். குழந்தைகளிடம் சிறு மனஸ்தாபம் ஏற்படும்.உத்தியோகம் சம்பந்தமான வெளியூர் பயணங்களை தவிர்க்கவும். பெரியவர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சி கொடுக்கும். தொழிலில் மேலதிகாரிகள் ஆதரவு கிட்டும்.
விருச்சிகம்
உங்களின் ராசிக்கு குழந்தைகளால் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சி நடைபெறும். நண்பர்களின் ஒத்துழைப்பு லாபத்தை கொடுக்கும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். உத்தியோகத்தில் நல்ல முன்னேற்றம் காண்பீர். தொழில் ரீதியாக வெளியூர் பயணம் செல்ல நேரலாம். புதிய பொருட்களின் சேர்க்கை உண்டாகும்.
தனுசு
உங்களின் ராசிக்கு உறவினர்களால் மகிழ்ச்சி அடைவீர்கள். விலை உயர்ந்த பொருட்களை வாங்க ஆர்வம் கொள்வீர். தொழிலில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். புதிய தொழிலை தொடங்குவதற்கு முயற்சி உண்டாகும். வெளியூர்களில் இருந்து வரவேண்டிய தொகை கைக்கு வரும்.
மகரம்
உங்களின் ராசிக்கு வீட்டில் ஒற்றுமை குறையும். ஆடம்பர செலவுகளை தவிர்த்தால் பணம் பிரச்சனை அகலும். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். தொழிலில் உடனிருப்பவர்கள் சாதகமாக இருப்பார். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவி கிடைக்கும்.
கும்பம்
உங்களின் ராசிக்கு குழந்தைகளால் மன அமைதி உண்டாகும். வெளியூர் பயணங்களால் வீண் அலைச்சல் டென்ஷன் ஏற்படும். உங்கள் ராசியில் பகல் 02.42 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் தேவை இல்லாமல் எந்தவித பிரச்சினைகளும் தலையிடாமல் இருப்பது நல்லது. எதிர்பார்த்த உதவிகளில் சிறு தாமதம் ஏற்படும்.
மீனம்
உங்களின் ராசிக்கு பகல் 2.42 மேல் சந்திராஷ்டமம் இருப்பதால் தேவையில்லாமல் மன சங்கடம் உண்டாகும். எந்த செயல் செய்தாலும் சற்று பொறுமையாக இருங்கள் அதுவே நல்லது. பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் கொள்ளுங்கள். சுபகரியங்களை மற்றும் புதிய முயற்சிகளை எடுக்க வேண்டாம்.