மேஷம் ராசி அன்பர்களே..!
இன்று உங்களின் ராசிக்கு சிறப்பான பணவரவுகள் ஏற்பட்டு உங்களின் தேவைகள் யாவும் பூர்த்தியாகும்.
உடல்நிலையில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும் எனவே ஆரோக்கிய விஷயத்தில் கவனமுடனிருப்பது நல்லது. குடும்ப ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்களையும் அனுசரித்து செல்வதன் மூலம் வீண் பிரச்சனைகளை தவிர்க்கலாம். திருமண சுபகாரிய முயற்சிகளில் தடை மற்றும் தாமதங்கள் ஏற்படலாம். எதிர்பாராத உதவிகளும் கிடைக்கப்பெறும். கடன்கள் யாவும் படிப்படியாக குறையும். நீங்கள் முருக வழிபாடு மேற்கொள்வது நல்லது.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு.
அதிர்ஷ்டமான எண்: 2.
அதிர்ஷ்டமான நிறம்: காவி நிறம்.