மிதுனம் ராசி அன்பர்களே..!
இன்று உங்களின் ராசிக்கு எடுக்கும் முயற்சியில் சாதகமான பலன்களை அடைவீர்கள்.
கணவன் மனைவிக்கு இடையே சிறு மனஸ்தாபங்கள் ஏற்பட்டாலும் ஒற்றுமை குறையாமல் இருக்கும். திருமண சுபகாரிய முயற்சிகளில் தாமதபலன் உண்டாகும். உடல் ஆரோக்கியத்திலிருந்த பாதிப்புகள் விலகி சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். பணவரவு தேவைக்கேற்றபடி அமைந்து உங்களின் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும் என்றாலும் சிக்கனமாக இருப்பதும் முடிந்தவரை தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பதும் நல்லது. ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வதன் மூலம் கடன் வாங்கும் சூழ்நிலையை தவிர்க்கலாம்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு.
அதிர்ஷ்டமான எண்: 6.
அதிர்ஷ்டமான நிறம்: சிவப்பு நிறம்.