கடகம் ராசி அன்பர்களே..!
இன்று உங்களின் ராசிக்கு பூர்வீக சொத்துக்களால் வீண்பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.
உற்றார் உறவினர்களை அனுசரித்து சென்றால் அவர்கள் மூலம் அனுகூலபலன் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் ஓரளவுக்கு முன்னேற்றங்கள், உயர்வுகள் உண்டாகும். கூட்டாளிகளால் சிறுசிறு பிரச்சினைகள் தோன்றி மறையும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் ஏற்பட்டாலும் அதன்மூலம் லாபம் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் தாமதப்படும். மாணவர்கள் வீண் பொழுதுபோக்குகளை தவிர்த்து கல்வியில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது.
அதிர்ஷ்டமான திசை: வடகிழக்கு.
அதிர்ஷ்டமான எண்: 1.
அதிர்ஷ்டமான நிறம்: வெள்ளை நிறம்.