மகரம் ராசி அன்பர்களே..!
இன்று குடும்பத்துடன் செல்லும் பயணங்கள் மகிழ்ச்சி தரக்கூடியதாக இருக்கும்.
தொழிலில் ஏற்படும் மாற்றங்களால் வருமானம் அதிகரிக்கும். கடுமையாக உழைக்க வேண்டியதிருக்கும். போட்டிகள் குறையும். பொருளாதாரம் சீராக இருக்கும். பொது காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். மற்றவர்களின் தேவையைப் பூர்த்தி செய்வீர்கள். நினைத்த பொருட்களை வாங்கக்கூடும். பிரச்சினைகளை கட்டுப்படுத்திக் கொள்வீர்கள். எதிர்பார்த்த லாபம் உண்டாகும். கடன் பிரச்சினைகள் சரியாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களின் நிர்வாகத்தன்மையும் வெளிப்படும். மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் நிலவும். மாணவர்கள் கல்வியில் நிதானத்தை கடைப்பிடிப்பார்கள். வெற்றிப் பெறக்கூடிய சூழலும் அமையும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணியவேண்டும். வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அப்படியே விஷ்ணு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுத்து வாருங்கள் , இன்றையநாள் சிறப்பாக இருக்கும்.
அதிர்ஷ்டமான திசை: கிழக்கு.
அதிர்ஷ்டமான எண்: 2 மற்றும் 7.
அதிர்ஷ்டமான நிறம்: சிவப்பு மற்றும் வெள்ளை நிறம்.