விருச்சிகம் ராசி அன்பர்களே..!
இன்று உங்களின் ராசிக்கு எடுக்கும் முயற்சிகளில் வெற்றியினைப் பெறமுடியும்.
பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். உற்றார் உறவினர்கள் வகையிலும் அனுகூலம் உண்டாகும். சிலருக்கு பூர்வீக சொத்து விஷயங்களில் இருந்த வம்பு, வழக்குகள் ஒரு முடிவுக்கு வரும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டாகும். வீட்டில் புதிய பொருள் சேரும். கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் சரளமான நிலை இருக்கும். மாணவ மாணவியர்கள் மற்ற துறைகள் சார்ந்த விஷயத்தில் சிறந்து விளங்குவீர்கள்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு.
அதிர்ஷ்டமான எண்: 4.
அதிர்ஷ்டமான நிறம்: காவி நிறம்.