ரிஷபம் ராசி அன்பர்களே..!
இன்று நீங்கள் அமைதியான மனநிலையுடன் இருக்க மாட்டீர்கள்.
பாதகமான விளைவு ஏற்படுமென்று மனதில் எண்ணிக் கொண்டிருப்பீர்கள். பணியில் சிறப்பான வளர்ச்சி இருக்காது. இன்று நீங்கள் திட்டமிட்டு கவனமாக பணியாற்ற வேண்டும். இன்று உங்கள் துணையுடன் நல்லுறவை ஏற்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளுங்கள். நட்பான அணுகுமுறையை பராமரியுங்கள். நகைச்சுவை உணர்வை வெளிப்படுத்தி அவரை மகிழ்ச்சி படுத்துங்கள். நீங்கள் பெரிய முதலீடு செய்வதற்கு பண விஷயத்தில் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும்.
இன்று உங்களுக்கு அதிகச் செலவுகள் காணப்படும். உங்களின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்காது. மூட்டு மற்றும் கால்களில் வலி ஏற்பட வாய்ப்புள்ளது. முறையான சிகிச்சை மேற்கொள்வது நல்லது. உணவு விஷயத்தில் கட்டுப்பாடு தேவை. மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வம் குறைந்தே காணப்படும். பெற்றோர்கள் பிள்ளைகளின் மனமறிந்து செயல்படுவது நல்லது. இன்று நீங்கள் மகாலட்சுமி வழிபாடு மேற்கொள்வது நல்லபலனைப் பெற்றுக் கொடுக்கும். அதிர்ஷ்டமான திசை: தெற்கு. அதிர்ஷ்டமான எண்: 2. அதிர்ஷ்டமான நிறம்: ரோஸ் நிறம். ஸ்ஸ்ஸ்