துலாம் ராசி அன்பர்களே..!
இன்று உங்களின் ராசிக்கு சிறப்பான அமைப்பு.
நீங்கள் நினைத்ததெல்லாம் நிறைவேறும். பல நல்ல வாய்ப்புகள் உங்களைத் தேடிவரும். எந்தவித சிக்கலையும் எதிர்கொண்டு ஏற்றங்களை அடைவீர்கள். பணவரவுகளுக்கு பஞ்சம் இருக்காது. குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். சிலருக்கு அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டாகும். கணவன் மனைவிக்கிடையே விட்டுக் கொடுத்து நடந்துக் கொண்டால் ஒற்றுமை குறையாமல் இருக்கும். குடும்பத்திலுள்ளவர்களையும் உற்றார் உறவினர்களையும் அனுசரித்துச் செல்வதன் மூலம் நிம்மதியும், மனமகிழ்ச்சியும் நிலவும்.
அதிர்ஷ்டமான திசை: வடமேற்கு.
அதிர்ஷ்டமான எண்: 5.
அதிர்ஷ்டமான நிறம்: மஞ்சள் நிறம்.