விருச்சிகம் ராசி அன்பர்களே..!
இன்று எதிலும் நியாயமாக நடக்க வேண்டிய நாளாக இருக்கும்.
உயரதிகாரிகளிடம் அமைதியாக பேசி பணிபுரிய வேண்டும். செய்யும் காரியங்களால் பெருமை ஏற்படும். பணவரவு சீராக இருக்கும். புத்திச்சாதுரியம் கூடும். ஆன்மீகத்தில் நாட்டம் செல்லும். தெய்வத்திற்காக சிறு தொகையைச் செலவிடுவீர்கள். தொழில் வியாபாரத்தில் முன்னேற்றமான நிலை நிலவும். பெரிய தொகையை எதிலும் ஈடுபடுத்த வேண்டாம். அக்கம்பக்கத்தினரின் ஆதரவு கிடைக்கும். செய்யும் காரியத்தில் கவனம் வேண்டும். பெரியவர்களிடம் ஆலோசனை கேட்டு எதிலும் முடிவெடுங்கள். குடும்பத்தில் உள்ளவர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். கோபத்தை தவிர்க்க வேண்டும். எடுக்கும் முயற்சியில் நிதானம் தேவை. இன்று உங்களின் திறமை வெளிப்படும். காதலில் உள்ளவர்கள் நிதானமான போக்கையே கையாள வேண்டும். தேவையில்லாத வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது கருநீல நிறத்தில் ஆடை அணியவேண்டும். கருநீலம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அப்படியே சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு நெய்தீபம் ஏற்றுவது நல்ல பலனைப் பெற்றுக்கொடுக்கும்.
அதிர்ஷ்டமான திசை: மேற்கு.
அதிர்ஷ்டமான எண்: 6 மற்றும் 7.
அதிர்ஷ்டமான நிறம்: கருநீலம் மற்றும் நீல நிறம்.