கும்பம் ராசி அன்பர்களே…! இன்று சூழ்நிலைக்குத் தக்கவாறு தங்களை மாற்றியமைத்துக் கொள்ளும் குணம் கொண்ட உங்களின் ராசிக்கு, சாதகமற்ற அமைப்பு என்பதால் நீங்கள் எதிலும் கவனமாக இருப்பது நல்லது. தேவையற்ற வீண் விரயங்கள் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் உண்டாக கூடிய பாதிப்புகளால் மருத்துவ செலவு ஏற்படும்.
வண்டி வாகனங்களில் செல்லும் போது மிக கவனமாக இருக்க வேண்டும்.தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு உண்டாகக்கூடிய மறைமுக எதிர்ப்புகளால் வர வேண்டிய வாய்ப்புகளில் தாமதம் ஏற்படும். தேவையற்ற பயணங்களைத் தவிர்த்து கொள்வதன் மூலம் அலைச்சல்களை குறைத்துக்கொள்ள முடியும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை: கிழக்கு
அதிர்ஷ்டமான எண்: 4
அதிர்ஷ்டமான நிறம்: சிவப்பு