மேஷம் ராசி அன்பர்களே..!
இன்று நம்பிக்கை குறைந்துக் காணப்படும்.
உங்களின் பொறுமை சோதனைக்குள்ளாகும். திட்டமிட்டு செயல்களை ஆற்ற வேண்டும். இன்று பணியிடசூழல் சாதகமாக இருக்காது. சக பணியாளர்களிடம் கவனமாக பழகுங்கள். இன்று உங்களிடம் அனுசரிக்கும் போக்கு காணப்படாது. இன்று நீங்கள் மகிழ்ச்சியை தேடுவீர்கள். இன்று உங்களின் துணையிடம் மகிழ்ச்சியாக இருக்க முடியாது. உறவில் மகிழ்ச்சி நிலவ அன்பும் அனுசரணையும் தேவை. நீங்கள் அதிகபணம் சம்பாதிக்க முடியாது. வரவைவிட செலவு அதிகமாக இருக்கும். ஆரோக்கியம் கவலைதரும் வகையில் சில பதற்றங்கள் காணப்படும். நேர்மறை எண்ணத்தோடு இருந்தால் ஆரோக்கியத்தை தக்கவைத்துக் கொள்ளலாம். மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வம் குறைந்தே காணப்படும். பெற்றோர்கள் பிள்ளைகளின் மனம் அறிந்து செயல்படுவது நல்லது. இன்று நீங்கள் மகாலட்சுமி வழிபாடு மேற்கொள்வது நல்லபலனைப் பெற்றுக் கொடுக்கும்.
அதிர்ஷ்டமான திசை: வடக்கு.
அதிர்ஷ்டமான எண்: 2.
அதிர்ஷ்டமான நிறம்: ஊதா நிறம்.