நாளைய பஞ்சாங்கம்
01-05-2021, சித்திரை 18, சனிக்கிழமை, பஞ்சமி திதி மாலை 04.42 வரை பின்பு தேய்பிறை சஷ்டி.
மூலம் நட்சத்திரம் பகல் 10.15 வரை பின்பு பூராடம்.
நாள் முழுவதும் சித்தயோகம்.
நேத்திரம் – 2.
ஜீவன் – 1.
ஸ்ரீவராஹ ஜெயந்தி.
இராகு காலம் – காலை 09.00-10.30,
எம கண்டம் மதியம் 01.30-03.00,
குளிகன் காலை 06.00-07.30,
சுப ஹோரைகள் – காலை 07.00-08.00, பகல் 10.30-12.00, மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00.
நாளைய ராசிப்பலன் – 01.05.2021
மேஷம்
உங்களின் ராசிக்கு நீங்கள் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. தொழிலில் கூட்டாளிகளின் மாற்று கருத்தால் மனஸ்தாபங்கள் ஏற்படலாம். எதிர்பாராத செலவுகள் உண்டாகும். மனைவி வழி உறவினர்களால் உதவிகள் கிடைக்கும். குடும்பத்தில் பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள்.
ரிஷபம்
உங்களின் ராசிக்கு உங்களுக்கு மனகுழப்பம் ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் நிதானத்துடன் செயல்பட வேண்டும். சுப முயற்சிகளை தள்ளி வைப்பது நல்லது. அறிமுகம் இல்லாதவர்களிடம் பேசுவதை தவிர்த்தால் பிரச்சினைகள் குறையும். உடல்நிலையில் கவனம் தேவை.
மிதுனம்
உங்களின் ராசிக்கு பிள்ளைகளால் குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். பண வரவு தாராளமாக இருக்கும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் புதிய வாய்ப்புகள் அமையும். பூர்வீக சொத்துக்கள் வழியில் எதிர்பார்த்த லாபம் கிட்டும்.
கடகம்
உங்களின் ராசிக்கு உங்களுக்கு பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். உடன்பிறப்புகள் வழியாக நல்ல செய்திகள் வந்து சேரும். தொழில் புரிவோர்களுக்கு வெளியூர் பயணங்களால் அனுகூலப் பலன்கள் உண்டாகும். உற்றார் உறவினர்களுடன் சுமூக உறவு ஏற்படும். கொடுத்த கடன் வசூலாகும்.
சிம்மம்
உங்களின் ராசிக்கு உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். வீண் செலவுகளால் குடும்பத்தில் நெருக்கடிகள் அதிகரிக்கலாம். செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. பெற்றோர்களை அனுசரித்து செல்வதன் மூலம் அவர்களது அன்பை பெற முடியும். தொழிலில் உள்ள போட்டி பொறாமைகள் சற்று குறையும்.
கன்னி
உங்களின் ராசிக்கு நீங்கள் எந்த செயலிலும் புது உற்சாகத்தோடு ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களின் அன்பும் ஆதரவும் கிட்டும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு எதிர்பாராத புதிய வாய்ப்புகள் கிடைக்கும். நண்பர்களின் சந்திப்பு மன மகிழ்ச்சியை கொடுக்கும். உடல் ஆரோக்கியம் சீராகும்.
துலாம்
உங்களின் ராசிக்கு இல்லத்தில் உறவினர்கள் மூலம் சுபசெலவுகள் உண்டாகும். நண்பர்களின் ஆலோசனைகளால் உங்கள் பிரச்சினைக்கு நல்ல தீர்வு கிடைக்கும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். தொழில் தொடங்கும் முயற்சிகளில் அனுகூலப் பலன் கிட்டும். வீட்டுத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும்.
விருச்சிகம்
உங்களின் ராசிக்கு தொழில் வியாபரம் செய்பவர்களுக்கு அமோகமான பலன்கள் உண்டாகும். மற்றவர்கள் மத்தியில் உங்கள் செல்வாக்கு மேலோங்கி இருக்கும். திருமண சுபகாரிய பேச்சுவார்த்தைகள் சுமூகமாக முடியும். பொருளாதார மேன்மையால் நீங்கள் நினைத்த காரியம் எளிதில் நிறைவேறும்.
தனுசு
உங்களின் ராசிக்கு நீங்கள் எந்த ஒரு செயலையும் கடின உழைப்புடன் செய்து முடிப்பீர்கள். தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கப் பெற்று மனமகிழ்ச்சி உண்டாகும். குடும்பத்தில் பெரியவர்களுடன் இருந்த மனஸ்தாபங்கள் விலகும். உடல் ஆரோக்கிய பாதிப்புகள் குறையும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும்.
மகரம்
உங்களின் ராசிக்கு உங்களுக்கு குடும்பத்தினரால் மருத்துவ செலவுகள் ஏற்படலாம். சுபகாரிய முயற்சிகளில் சற்று மந்த நிலை ஏற்படும். உற்றார் உறவினர்களால் வீண் பிரச்சினைகளை சந்திக்க வேண்டி வரும். விட்டு கொடுத்து செல்வது நல்லது. வியாபார ரீதியான கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.
கும்பம்
உங்களின் ராசிக்கு உங்களுக்கு குடும்பத்தில் சுப செலவுகள் ஏற்படும். வழக்கு சம்பந்தமான விஷயங்களில் வெற்றி உண்டாகும். பெரிய மனிதர்களின் நட்பு மனதிற்கு தெம்பை கொடுக்கும். நண்பர்களின் ஆலோசனையால் தொழிலில் நற்பலன் கிடைக்கும். தெய்வ வழிபாடு மனதிற்கு நிம்மதியை தரும்.
மீனம்
உங்களின் ராசிக்கு குடும்பத்தில் ஒற்றுமையும், அமைதியும் கூடும். உடன்பிறந்தவர்கள் வழியில் நல்ல செய்தி கிடைக்கும். பெற்றோரின் நன்மதிப்பை பெறுவீர்கள். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும். தொழிலில் ஏற்பட்ட புதிய மாற்றங்களால் லாபம் பெருகும். தெய்வீக காரியங்கள் செய்து ஆனந்தம் அடைவீர்கள்.