சிம்மம் ராசி அன்பர்களே..!
இன்று உங்களின் ராசிக்கு பொருளாதார நெருக்கடிகள் ஏற்படும்.
வீண் விரயங்களும் உண்டாகும். கணவன் மனைவிக்கிடையே தேவையற்ற வாக்குவாதங்கள் ஏற்படும் என்பதால் விட்டுக்கொடுத்து செல்வது மிகவும் நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்த வேண்டிவரும். பணவரவுகளில் சற்று நெருக்கடியான நிலையே இருக்கும். குடும்ப தேவைகளை பூர்த்தி செய்ய கடன் வாங்க வேண்டிய சூழ்நிலைகள் ஏற்படலாம். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் சிறுசிறு தடைகள் மற்றும் தாமதங்களுக்கு பிறகு அனுகூலப்பலன் உண்டாகும். உற்றார் உறவினர்களின் மூலமும் தேவையற்ற பிரச்சனைகள் ஏற்படலாம். பணம் கொடுக்கல் வாங்கலில் நம்பியவர்களே துரோகம் செய்வார்கள். எதிலும் சிந்தித்து செயல்படுவது மிகவும் நல்லது.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு.
அதிர்ஷ்டமான எண்: 7.
அதிர்ஷ்டமான நிறம்: அடர்மஞ்சள் நிறம்.