கன்னி ராசி அன்பர்களே..!
இன்று உங்களின் ராசிக்கு முன்கோபத்தைக் குறைத்துக் கொண்டு நிதானமாக செயல்பட்டால் ஏற்றங்களை அடையமுடியும்.
கணவன் மனைவிக்கிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். முடிந்தவரை பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது மிகவும் நல்லது. உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் ஒரளவுக்கு அனுகூலமான பலன்களைப் பெறமுடியும். உடல் ஆரோக்கியத்தில் உஷ்ணம் சம்பந்தப்பட்ட பாதிப்புகள் ஏற்படலாம். தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டி பொறாமைகள் மறைந்து இலாபம் அதிகரிக்கும். கூட்டாளிகள் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட்டு உயரதிகாரிகளின் பாராட்டுதல்களைப் பெற்றுவிட முடியும். உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பும் சிறப்பாக இருக்கும்.
அதிர்ஷ்டமான திசை: மேற்கு.
அதிர்ஷ்டமான எண்: 2.
அதிர்ஷ்டமான நிறம்: ஆரஞ்சு நிறம்.