மீனம் ராசி அன்பர்களே…! இன்று உங்களின் ராசிக்கு கணவன், மனைவி ஒருவரை ஒருவர் அனுசரித்துச் சென்றால் குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். பண வரவுகள் ஏற்ற இறக்கமாக இருக்கும் என்பதால் கொடுக்கல் வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும்பொழுது கவனமாக இருக்க வேண்டும். உற்றார் உறவினர்களால் வீண் பிரச்சினை ஏற்படும் என்பதால் சற்று கவனத்துடன் பழகுவது நல்லது.
வார்த்தையில் நிதானத்தை கடைபிடியுங்கள். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நெருக்கடிகள் ஏற்பட்டாலும், உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பால் வேலைபளு குறையும். மாணவ மாணவியர்களுக்கு தேவையற்ற பொழுது போக்குகளில் ஈடுபடுவதை தவிர்த்து, கல்வியில் சற்று அதிகம் கவனம் செலுத்துவது நல்லது.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை: மேற்கு
அதிர்ஷ்டமான எண்: 2
அதிர்ஷ்டமான நிறம்: நீல நிறம்