துலாம் ராசி அன்பர்களே..!
இன்று உங்களின் ராசிக்கு பணவரவுகள் ஏற்ற இறக்கமாக இருந்தாலும் குடும்ப தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும்.
கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி வாக்குவாதங்கள் உண்டாகும். ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது மிகவும் நல்லது. கடன்களும் சற்றே குறையும். பணம் கொடுக்கல் வாங்கலில் இருந்த பிரச்சனைகள் விலகும் என்றாலும் பெரிய தொகைகளை கடனாகக் கொடுப்பதைத் தவிர்ப்பது நல்லது. வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த கௌரவமான பதவி உயர்வுகளை பெறமுடியும். தொழில் மற்றும் வியாபாரத்தில் போட்டிகளை சமாளிக்க வேண்டியிருந்தாலும் எதிர்பார்த்த லாபத்தினைப் பெறுவீர்கள்.
அதிர்ஷ்டமான திசை: வடக்கு.
அதிர்ஷ்டமான எண்: 8.
அதிர்ஷ்டமான நிறம்: ஊதா நிறம்.