விருச்சிகம் ராசி அன்பர்களே..!
இன்றைய நாள் உங்களுக்கு சுமாரான நாளாக இருக்கும்.
விரும்பிய பலன்களை அடைய சில அசௌகரியங்களை விட்டுக் கொடுக்க வேண்டியதிருக்கும். இலக்குகளை அடைவது கடினமாக உணர்வீர்கள். பணியில் நல்ல பலன்களைக் காண உங்களின் புத்திசாலித்தனத்தை பயன்படுத்த வேண்டும். உங்களின் மனதில் சில குழப்பங்கள் காணப்படும். இதனை உங்கள் துணையிடம் வெளிப்படுத்துவீர்கள். இதனால் தேவையற்ற வாக்குவாதங்கள் ஏற்படும். பொறுமையை கடைப்பிடிக்க வேண்டும். குழந்தைகளால் இன்று செலவுகள் அதிகரிக்கும். இன்று சம உங்களுக்கு சளி போன்ற பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது. குளிர்ச்சியான உணவு வகைகளை தவிர்ப்பது நல்லது. மாணவர்களுக்கு இன்று விளையாட்டு மற்றும் கேளிக்கையில் மனம் ஈடுபடும். நண்பர்களிடத்தில் கவனமுடனிருப்பது நல்லது. இன்று நீங்கள் நரசிம்மர் வழிபாடு மேற்கொள்வது நல்லபலனைப் பெற்றுக் கொடுக்கும்.
அதிர்ஷ்டமான திசை: வடக்கு.
அதிர்ஷ்டமான எண்: 1.
அதிர்ஷ்டமான நிறம்: மஞ்சள் நிறம்.