மகரம் ராசி அன்பர்களே..!
இன்று உங்களின் ராசிக்கு எடுக்கும் முயற்சிகளில் தடையின்றி வெற்றிக் கிடைக்கும்.
பணவரவுகள் சிறப்பாக இருக்கும். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாவதுடன் கடன்களும் படிப்படியாக குறையும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தினால் மருத்துவ செலவுகளை தவிர்க்கலாம். குடும்பத்தில் சுபகாரியங்கள் கை கூடுவதில் தாமதம் உண்டாகும். கணவன் மனைவிக்கிடையே தேவையற்ற வாக்குவாதங்கள் ஏற்படும் என்பதால் பேச்சில் நிதானத்தை கடைபிடித்து விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. புத்திர வழியில் மகிழ்ச்சித் தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும்.தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு கூட்டாளிகளால் சிறுசிறு பிரச்சினைகள் ஏற்பட்டாலும் பெரிய கெடுதிகள் ஏற்படாது.
அதிர்ஷ்டமான திசை: வடக்கு.
அதிர்ஷ்டமான எண்: 3.
அதிர்ஷ்டமான நிறம்: பிரவுன் நிறம்.