மிதுனம் ராசி அன்பர்களே..!
இன்று வளர்ச்சி குறைந்து காணப்படும்.
சவால்கள் நிறைந்திருக்கும். உங்களின் பொறுப்புகளை நிறைவேற்றுவது சற்று கடினமாகவே இருக்கும். சக பணியாளர்களுடன் சுமூகமான உறவு காணப்படாது, என்றாலும் பொறுமையாக கையாண்டால் நல்லபலன் கிடைக்கும். உங்களின் துணையுடன் அக்கறையற்ற பேச்சின் காரணமாக தவறான புரிந்துணர்வு ஏற்படும். இதனால் கவனமாக செயல்பட்டு நல்ல புரிந்துணர்வை உருவாக்க முயற்சி செய்ய வேண்டும்.
பயணத்தின் பொழுது பண இழப்பு நேரலாம். எனவே கவனமாக பணத்தை கையாள வேண்டும். இன்று தலைவலிக்கான வாய்ப்புகள் அதிகமுள்ளது. தியானம் மேற்கொள்வதன் மூலம் அமைதி பெறலாம். இன்று நீங்கள் முருக வழிபாடு மேற்கொள்வது நல்லபலனைப் பெற்றுக் கொடுக்கும். அதிர்ஷ்டமான திசை: வடகிழக்கு. அதிர்ஷ்டமான எண்: 7. அதிர்ஷ்டமான நிறம்: ஆரஞ்சு நிறம்.