மீனம் ராசி அன்பர்களே..!
இன்று உங்களின் ராசிக்கு எதிலும் கவனத்துடன் செயல்பட வேண்டிய காலமாகும்.
தேவையற்ற பிரச்சனை ஏற்பட்டு மனநிம்மதி குறையும். குடும்பத்தில் கணவன் மனைவிக்கிடையே வீண் வாக்குவாதங்கள் ஏற்பட்டு ஒற்றுமை குறையும் என்பதால் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. பணவரவுகள் சுமாராகத்தான் இருக்கும். வண்டி வாகனங்களால் வீண் விரயங்கள் ஏற்படலாம். உற்றார் உறவினர்களால் சுபகாரிய முயற்சிகளில் தடைகள் ஏற்படலாம். உடல் ஆரோக்கியத்தில் சற்றுக்கவனம் செலுத்துவது நல்லது. தேவையற்ற பயணங்களை குறைத்துக் கொள்வதன் மூலம் அலைச்சலைத் தவிர்க்கலாம். உத்தியோகஸ்தர்களுக்கு சற்று வேலைபளு அதிகமாக இருந்தாலும் பணிகள் திறம்பட செயல்பட முடியும்.
அதிர்ஷ்டமான திசை: தென்கிழக்கு.
அதிர்ஷ்டமான எண்: 9.
அதிர்ஷ்டமான நிறம்: ஊதா நிறம்.