Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கன்னி ராசிக்கு…! வளர்ச்சி உண்டாகும்..! பணவரவு அதிகரிக்கும்..!!

கன்னி ராசி அன்பர்களே..!
இன்று சந்தோச சிந்தனைகள் மனதை உற்சாகப்படுத்தும்.

சிறு செயலையும் நேர்த்தியுடன் செய்வீர்கள். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். தாராள பணவரவு உண்டாகும். உடல் ஓய்வில் இருக்கும். வியாபாரம் தொடர்பான வெளியூர் பயணங்கள் செல்ல வேண்டியதிருக்கும். தொழிலை விரிவுபடுத்துவதற்கான எண்ணங்கள் மேலோங்கும். குடும்பத்தாரிடம் கலந்து ஆலோசித்து எதிலும் முடிவெடுக்க வேண்டும். புத்திக்கூர்மை வெளிப்படும். செயல் திறமை வெளிப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு உண்டாகும். தொழில் சம்பந்தமாக பயணங்கள் மேற்கொள்ள வேண்டியதிருக்கும். யாரை நம்பியும் பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். உறவினர்கள் உங்களுக்கு அன்பு பாராட்டுவார்கள். தேவையில்லாத செலவினை தவிர்க்க வேண்டும். மாணவர்கள் கல்வியில் அக்கறை காட்ட வேண்டும். விளையாட்டிலும் ஆர்வம் அதிகமாகவே காணப்படும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணியவேண்டும். வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். அப்படியே முருகப்பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுத்து பாருங்கள், இன்றைய நாள் சிறப்பாக இருக்கும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு.
அதிர்ஷ்டமான எண்: 4 மற்றும் 8.
அதிர்ஷ்டமான நிறம்: வெள்ளை மற்றும் பச்சை நிறம்.

Categories

Tech |