நாளைய பஞ்சாங்கம்
12-05-2021, சித்திரை 29, புதன்கிழமை, பிரதமை திதி பின்இரவு 03.06 வரை பின்பு வளர்பிறை துதியை.
கிருத்திகை நட்சத்திரம் பின்இரவு 02.40 வரை பின்பு ரோகிணி.
அமிர்தயோகம் பின்இரவு 02.40 வரை பின்பு சித்தயோகம்.
நேத்திரம் – 0.
ஜீவன் – 0.
கிருத்திகை.
முருக வழிபாடு நல்லது.
இராகு காலம் மதியம் 12.00-1.30,
எம கண்டம் காலை 07.30-09.00,
குளிகன் பகல் 10.30 – 12.00,
சுப ஹோரைகள் காலை 06.00-07.00, காலை 09.00-10.00, மதியம் 1.30-2.00, மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00, 11.00-12.00
நாளைய ராசிப்பலன் – 12.05.2021
மேஷம்
உங்களின் ராசிக்கு எந்த வேலையிலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். உத்தியோகத்தில் வீண் பிரச்சினைகள் ஏற்படலாம். தேவையில்லாத செலவுகளால் கடன்கள் வாங்க நேரிடும். எதிலும் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது. வியாபாரத்தில் போட்டி பொறாமைகள் சற்றே குறையும்.
ரிஷபம்
உங்களின் ராசிக்கு தொழில் ரீதியாக எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். எதிரிகளின் பலம் குறைந்து உங்கள் பலம் கூடும். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். குடும்பத்தில் கணவன் மனைவியிடையே இருந்த மனசங்கடங்கள் மறையும். நண்பர்களால் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.
மிதுனம்
உங்களின் ராசிக்கு உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். குடும்பத்தில் விட்டு கொடுத்து சென்றால் பிரச்சினைகளை தவிர்க்கலாம். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். புதிய முயற்சிகளை தவிர்ப்பது உத்தமம்.
கடகம்
உங்களின் ராசிக்கு இல்லத்தில் சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மகிழ்ச்சி கூடும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். வியாபார ரீதியான கொடுக்கல் வாங்கலில் லாபம் கிட்டும். புதிய முயற்சிகளில் அனுகூலப் பலன்கள் உண்டாகும். ஆன்மீக காரியங்களில் ஈடுபாடு அதிகமாகும்.
சிம்மம்
உங்களின் ராசிக்கு குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். உறவினர்களால் ஏற்பட்ட பிரச்சினைகள் குறையும். புதுவிதமான செயல்பாட்டால் வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். கொடுத்த கடன் வசூலாகும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஒற்றுமையோடு செயல்படுவார்கள். பிள்ளைகளால் பெருமை சேரும்.
கன்னி
உங்களின் ராசிக்கு குடும்பத்தில் மருத்துவ செலவுகள் ஏற்படலாம். புதிய முயற்சிகளில் தாமதநிலை உண்டாகும். வாகன பராமரிப்பிற்காக சிறு தொகை செலவிட நேரிடும். உடனிருப்பவர்களை அனுசரித்து சென்றால் தொழிலில் லாபம் கிடைக்கும். பொருளாதார ரீதியாக உறவினர்கள் உறுதுனையாக இருப்பார்கள்.
துலாம்
உங்களின் ராசிக்கு உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகையை முதலீடு செய்யாது இருப்பது நல்லது. வேலையில் மேலதிகாரிகளிடம் தேவையில்லாத வாக்குவாதங்களை தவிர்ப்பது உத்தமம். வாகனங்களில் செல்லும் பொழுது நிதானத்துடன் செல்ல வேண்டும்.
விருச்சிகம்
உங்களின் ராசிக்கு உங்களுக்கு பணவரவு தாரளமாக அமைந்தாலும் அதற்கேற்ப செலவுகளும் இருக்கும். தொழில் சம்பந்தமான பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். குடும்பத்தினரிடம் விட்டு கொடுத்து செல்வது நல்லது. வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். தெய்வ வழிபாடு மனதிற்கு நிம்மதியை தரும்.
தனுசு
உங்களின் ராசிக்கு உங்களுக்கு மன அமைதி உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். நினைத்த காரியம் நினைத்தபடி நிறைவேறும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். நவீனகரமான கருவிகள் வாங்கும் முயற்சிகள் வெற்றியை தரும். பணி புரிபவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிட்டும்.
மகரம்
உங்களின் ராசிக்கு உங்களுக்கு தேவையற்ற மனக்குழப்பங்கள் உண்டாகும். உறவினர்களுடன் சிறுசிறு கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு சற்று அதிகரிக்கும். நண்பர்கள் வழியில் அனுகூலம் கிட்டும். பெற்றோரின் ஆறுதல் வார்த்தைகள் மனதிற்கு புது தெம்பை கொடுக்கும்.
கும்பம்
உங்களின் ராசிக்கு எதிர்பாராத வகையில் திடீர் செலவுகள் ஏற்படும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்க உணவு விஷயத்தில் கவனம் தேவை. சுபகாரிய முயற்சிகளில் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. பயணங்களால் நற்பலன்கள் உண்டாகும். உத்தியோகத்தில் உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்கும்.
மீனம்
உங்களின் ராசிக்கு நீங்கள் எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். அரசு வழியில் எதிர்பார்க்கும் கடன் உதவி எளிதில் கிட்டும். புதிய நபரின் அறிமுகம் ஏற்படும். குடும்பத்தில் பிள்ளைகளால் மகிழ்ச்சி தரும் இனிய நிகழ்வுகள் நடைபெறும். வராத பழைய கடன்கள் வசூலாகும்.