Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

நாளைய (28-08-2020) நாள் எப்படி இருக்கும்…? இதோ உங்கள் ராசிக்கு…!

நாளைய பஞ்சாங்கம்

28-08-2020, ஆவணி 12, வெள்ளிக்கிழமை, தசமி திதி காலை 08.38 வரை பின்பு வளர்பிறை ஏகாதசி.

 மூலம் நட்சத்திரம் பகல் 12.37 வரை பின்பு பூராடம்.

 அமிர்தயோகம் பகல் 12.37 வரை பின்பு பிரபலாரிஷ்ட யோகம்.

 நேத்திரம் – 2.

 ஜீவன் – 0.

 ஆவணி மூலம்.

 சுபமுகூர்த்த நாள்.

 சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.

 

இராகு காலம் – பகல் 10.30-12.00,

 எம கண்டம்-  மதியம் 03.00-04.30,

 குளிகன் காலை 07.30 -09.00,

 சுப ஹோரைகள் – காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00,  மாலை 05.00-06.00,  இரவு 08.00-10.00

நாளைய ராசிப்பலன் –  28.08.2020

மேஷம்

உங்களின் ராசிக்கு தனபாக்கியம் சுமாரான நிலையில் தான் இருக்கும். வீட்டில் பொருளாதார நெருக்கடியால் சாந்தம் குறையும். தொழிலில் வியாபாரம் குறைவாக தான் இருக்கும். அலைச்சல் கேற்ற லாபம் வரும் பூர்வீக சொத்துக்களில். வேலை செய்யும் இடங்களில் அனுகூலம் கிடைக்க வாய்ப்பு இருக்கு.

ரிஷபம்

உங்களின் ராசிக்கு மன அமைதி குறைந்து காணப்படுவீர்கள். மற்றவரிடம் தேவையில்லாமல் கோவப்படுவீர்கள்.உங்களின் ராசியில் சந்திராஷ்டமம் இருப்பதனால் சிறிது நிதானத்துடன் இருக்க வேண்டும். பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் கொள்ளுங்கள். தேவையில்லாமல் வெளியில் செல்வதை தவிர்க்கவும்.

மிதுனம்

உங்களின் ராசிக்கு தொழிலில் மகிழ்ச்சியான நிகழ்வு உண்டாகும். வீட்டில் பண செலவு குறையும். வங்கிகளில் எதிர்பார்த்த கடன் கிடைக்க வாய்ப்பு. உத்யோகம் ரீதியில் உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

கடகம்

உங்கள் ராசிக்கு தாராளமான தனவரவு, வீட்டில் சந்தோஷமும் உண்டாகும். வீட்டில் உள்ள அனைத்து குறைகளும் பூர்த்தியாகும். தொழிலில் இருப்பவர்களுக்கு தேவைக்கேற்ப சலுகைகள் கிடைக்கும். உத்தியோக ரீதியில் இருந்த பொறாமை போட்டி அகலும். தெய்வபக்தி காரியங்களில் ஈடுபாடு கொள்வீர்.

சிம்மம்

உங்களின் ராசிக்கு வீட்டில் உறவினர் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும் தேவையற்ற வீண் செலவுகள் செய்ய நேரும். வியாபாரம் சோர்ந்து காணப்படும். தொழிலில் உள்ள பிரச்சினைகள் சற்று குறையும். பெரியவர்களின் சந்திப்பால் மகிழ்ச்சி உண்டாகும்.

கன்னி

உங்களின் ராசிக்கு வரவுக்கு ஏற்ற செலவு இருக்கும். ஒற்றுமை குறைய நேரும் உடன்பிறந்தவர்கள் இடமிருந்து. தொழிலில் இருக்கும் நெருக்கடிகளை சமாளிப்பதற்கு சிறிது பொறுமையுடனும், சிக்கனமாகவும் நடந்துகொள்ளவேண்டும். நண்பர்களின் மூலம் உதவிகள் கிடைக்கும்.

துலாம்

உங்களின் ராசிக்கு மன மகிழ்ச்சியுடன் இருப்பீர். வீட்டில் நல்ல காரியங்கள் கைகூடி வரும். புதியதாய் பொருட்களை வாங்க ஆர்வம் கொள்வீர். தொழிலில் வெளியூர் பயணம் ஏற்படும். உத்தியோகத்தில் புதிய நண்பர்களின் சேர்க்கை நல்ல பலன் தரும்.

விருச்சிகம்

உங்களின் ராசிக்கு மனக்கவலை அதிகரிக்கும். உங்களின் ஆசையை நிறைவேற்ற பிறரிடம்  அனுசரிப்பாக செல்ல வேண்டும். சிறிது நிதானமாக செயல்படுங்கள் சுபகாரியங்களில் அதுவே சாதகமாக அமையும். உத்தியோக ரீதியில் பயணம் கொள்வதால் நல்ல பலன் கிடைக்கும்.

தனுசு 

உங்களின் ராசிக்கு வீட்டில் உள்ளவர்களிடம் ஒற்றுமையாக இருப்பீர். நல்ல செய்திகள் வந்து சேரும். சுபகாரியங்களில் முன்னேற்றம் காண்பீர். உத்தியோக ரீதியில் வெளி தொடர்பு மூலம் பலன் அமையும். மகிழ்ச்சி பெருகும் பெரியவர்களின் சந்திப்பில். பணத்தேவை பூர்த்தியாகும்.

மகரம்

உங்களின் ராசிக்கு தேவையில்லாத செலவுகள் வரும். வீட்டில் இருப்பவர்களிடம் கருத்துவேறுபாடுகள் உடன் நடந்து கொள்வீர். பேசும்பொழுது நிதானமாக இருங்கள். உத்தியோக ரீதியில் சற்று கவனம் தேவை. உறவினர்கள் உதவி கிடைக்கும்.

கும்பம்

உங்களின் ராசிக்கு மனதில் தைரியம் கிடைக்கும். பெரியவர்களின் ஆதரவால் தொழிலில் முன்னேற்றம் காண்பீர். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உங்களிடம் அனுசரித்து செல்வார். உறவினர்களால் உதவி கிடைக்கும். வீட்டில் ஒற்றுமை கூடி மகிழ்ச்சி பெருகும். கடன்கள் வசூலாகும்.

மீனம்

உங்களின் ராசிக்கு பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். குழந்தைகள் சோர்வு நீங்கி சுறுசுறுப்பு காண்பார். சுய தொழில் செய்பவருக்கு லாபம் கிடைக்கும். தொழிலில் இருப்பவர்களுக்கு வாய்ப்பு அமையும். புதிய கருவிகளை வாங்கும் முயற்சியில் வெற்றியை தரும்.

Categories

Tech |