தனுசு ராசி அன்பர்களே..!
இன்று எதிரிகளின் தொல்லையை சமாளித்து விடுவீர்கள்.
அனைத்து விஷயங்களையும் இன்று சரி செய்துவிடுகிறார்கள். உறவினர்களின் உதவி கிடைக்கும்.
தொழில் வியாபாரத்தில் பணவரவு திருப்தியளிக்கும். பெண்கள் தாய்வீட்டாரின் அன்பைப் பெறக்கூடும். சிலருக்கு வீடு மாறக்கூடிய சூழ்நிலை அமையும். வீட்டை புதுப்பிக்கும் எண்ணங்கள் மேலோங்கும். வேலைச்சுமை அதிகரிப்பதால் உடல் சோர்வு ஏற்படும். யாரையும் நம்பி பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். பண விஷயத்தில் எப்பொழுதும் கவனமாக இருங்கள். ஒரு சில வேளைகளில் பணிந்து செல்ல வேண்டியதிருக்கும். நல்ல முன்னேற்றத்தை அடைந்துக் கொள்வீர்கள். குடும்பத்தில் சுமுகமான சூழ்நிலையே நிலவும். கணவன்-மனைவிக்கிடையே சிலநேரங்களில் வாக்குவாதங்கள் எழக்கூடும், இதனை தவிர்த்து விடுங்கள். பிரச்சனைகளை சமாளிக்க சிந்தித்து பேச வேண்டும். திட்டமிட்டு காரியங்களை மேற்கொள்ள வேண்டும். மாணவர்கள் ஆசிரியர்களின் சொற்படி நடந்துக்கொள்வது நல்லது. பெரியவர்களுக்கு மதிப்பு கொடுக்க வேண்டும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது இளஞ்சிவப்பு நிறத்தில் ஆடை அணியவேண்டும். இளஞ்சிவப்பு உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அப்படியே அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுத்து வாருங்கள், இன்றைய நாள் நல்ல நாளாக அமையும்.
அதிர்ஷ்டமான திசை: வடகிழக்கு.
அதிர்ஷ்டமான எண்: 2 மற்றும் 6.
அதிர்ஷ்டமான நிறம்: இளஞ்சிவப்பு மற்றும் நீல நிறம்.