மேஷம் ராசி அன்பர்களே..!
இன்று உங்களின் முயற்சிகளை தைரியமாக மேற்கொள்ள வேண்டும், நம்பிக்கையை வளர்த்துக் கொள்ளவேண்டும்.
அதன் மூலம் மனதிலுள்ள கவலையை எதிர்க்கொண்டு வெற்றி காணமுடியும். இன்று நேரத்துடன் பணிகளை முடிக்க முடியாது, இது உங்களுக்கு கவலையை ஏற்படுத்தும் என்றாலும் திட்டமிடுவதன் மூலம் பணிகளை சுமூகமாக ஆற்ற முடியும். உங்களின் துணையிடம் இன்று பேசும்போது கவனமாக பேசவேண்டும். கவனமற்ற வார்த்தைகள் உறவின் நல்லிணக்கத்தை பாதிக்கும். வீணான செலவுகள் காணப்படும். பணத்தை கவனமாக கையாளவேண்டும். இதன்மூலம் நஷ்டத்தைத் தவிர்க்கலாம். தூக்கமின்மை காரணமாக இன்று சில பிரச்சனைகள் ஏற்படும். கால் வலியால் நீங்கள் பாதிக்கப்படலாம்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு.
அதிர்ஷ்டமான எண்: 6.
அதிர்ஷ்டமான நிறம்: மஞ்சள் நிறம்.