மீனம் ராசி அன்பர்களே..!
இன்று உங்களின் செயல்களில் தாமதம் காணப்படும்.
உங்களின் அணுகுமுறையில் பொறுமை தேவை. இறைவழிபாட்டின் மூலம் அமைதி பெறலாம். இன்று நீங்கள் பணிகளை திறமையாக மேற்கொள்வதை கடினமாக உணர்வீர்கள். இன்று உங்களின் சக பணியாளர்களிடம் கருத்து வேற்றுமை காணப்படும். இன்று பொறுமையை மேற்கொண்டு மனைவியின் அன்பை பெறுங்கள். உணர்ச்சிவசம் படுவதை தவிர்க்க வேண்டும். இது உங்களின் உறவைப் பாதிக்கும். இன்று உங்களுக்கு கூடுதல் செலவுகள் ஏற்படும். சேமிப்பதற்கான வாய்ப்பு குறைவு. இன்று உங்களுக்கு ஒவ்வாமை பாதிப்புகள் ஏற்படலாம். தியானம் செய்வதன்மூலம் ஆறுதல் பெறலாம். இன்று கல்வியில் ஆர்வம் குறைந்தே காணப்படும். பெற்றோர்கள் பிள்ளைகளின் மனம் அறிந்து செயல்படுவது நல்லது. இன்று நீங்கள் விஷ்ணுபகவான் வழிபாட்டை மேற்கொள்வது நல்லது.
அதிர்ஷ்டமான திசை: வடக்கு.
அதிர்ஷ்டமான எண்: 2.
அதிர்ஷ்டமான நிறம்: சிவப்பு நிறம்.