சிம்மம் ராசி அன்பர்களே..!
இன்று பல பிரச்சனைகள் காணப்படும், அவற்றை நீங்கள் சாமர்த்தியமாக கையாளவேண்டும்.
விவேகமாக நடந்துகொள்ளவேண்டும். பிறருடன் பேசும் பொழுது வார்த்தைகளில் கவனமாக இருக்கவேண்டும். இன்ற பணிச்சுமை அதிகமாக காணப்படும். இன்று உங்களின் மேலதிகாரிகளுடன் மோதல் ஏற்பட வாய்ப்புள்ளதால் எச்சரிக்கையாகப் பழக வேண்டும். இன்று நீங்கள் உங்கள் துணையிடம் வன்மையாக நடந்துக் கொள்வீர்கள். இதனால் இருவருக்கும் இடையேயான உறவு பாதிக்கும். இன்று உங்களின் துணையிடம் பொறுமையை கடைப்பிடிப்பது நல்லது. இன்று நிதி நிலைமையில் கட்டுப்பாடுகள் காணப்படும். உங்களின் பணத்தை திட்டமிட்டு கையாளவேண்டும். தேவையற்ற செலவுகள் வருத்தத்தை கொடுக்கும். சளி அல்லது இருமல் போன்ற பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் குளிர்ச்சியான உணவுகளை தவிர்ப்பது நல்லது.
அதிர்ஷ்டமான திசை: கிழக்கு.
அதிர்ஷ்டமான எண்: 7.
அதிர்ஷ்டமான நிறம்: மஞ்சள் நிறம்.