விருச்சிகம் ராசி அன்பர்களே..!
இன்று கணவன் மனைவிக்கிடையே பிரச்சனையில்லாத வாழ்க்கை அமையும்.
குழந்தைக்கு தேவையானதை வாங்கிக் கொடுப்பீர்கள். அரசு துறையில் உள்ளவர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக இருக்கும். தொழில் வளர்ச்சி மேலோங்கும். உற்சாகத்தினால் உள்ளம் மகிழும். மறைமுக எதிர்ப்புகளை சமாளிக்க வேண்டிய நாளாக இருக்கும். காரிய அனுகூலத்தை மனமகிழ்ச்சி கொள்வீர்கள். குடும்பத்தில் திருப்தியான சூழ்நிலை உண்டாகும். வாகனத்தில் செல்லும் பொழுது கவனமாக இருக்க வேண்டும். யாரைப் பற்றியும் விமர்சனம் செய்ய வேண்டாம். பெற்றோர்களின் ஆலோசனையை மதிக்க வேண்டும். முன்கோபத்தை முற்றிலும் தவிர்க்க வேண்டும். செலவினை கட்டுப்படுத்த வேண்டும். குடும்பத்தில் சுமுகமான சூழ்நிலை நிலவும். மாணவர்கள் கல்வியில் அக்கறை காட்ட வேண்டும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணியவேண்டும். மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அப்படியே சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுத்து வாருங்கள், இன்றைய நாள் சிறப்பாக இருக்கும்.
அதிர்ஷ்டமான திசை: வடகிழக்கு.
அதிர்ஷ்டமான எண்: 4 மற்றும் 5.
அதிர்ஷ்டமான நிறம்: வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம்.