துலாம் ராசி அன்பர்களே…! எல்லா வளமும் பெருகும் நாளாக இருக்கும்.
தொழில் வளர்ச்சிகள் உயரும். பயணங்கள் சென்றால் உள்ளம் மகிழும். வெகுநாட்களாக பயணம் செல்லாத நிலை மாறும். மனதிற்குள் உற்சாகம் பிறக்கும். பெண்கள் செய்யும் காரியங்களில் முன்னேற்றம் இருக்கும். மனசுக்குள் திருப்தி ஏற்படும். பெண்களுக்கு புதிய சினேகம் உண்டாகும். மனசுக்கு பிடித்தவரை கரம் பிடிக்கும் சூழ்நிலை உண்டாகும். கணவன் மனைவி இடையே மகிழ்ச்சி உண்டாகும். குழந்தைகள் விஷயங்களில் முன்னேற்றம் இருக்கும். குழந்தைகள் கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். எந்த காரியத்திலும் சிறப்பாக செய்வீர்கள். வீண் அலைச்சலை தவிர்க்க வேண்டும்.லாக்டோன் பிரச்சனை இருப்பதினால் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும். முக கவசம் அணிந்து செல்லவேண்டும்.
எதிர்பார்த்த உதவி கண்டிப்பாக கிடைக்கும். செய்யும் செயலில் தடைகள் வரலாம். எச்சரிக்கையுடன் எதையும் செய்ய வேண்டும். ஆதரவு இல்லாதவர்களுக்கு ஆதரவு கரம் கொடுக்க முடியும். மற்றவர்களுக்கு உதவி செய்யும் எண்ணம் இருக்கும். வீண் அலைச்சலை ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம். மாணவர்களுக்கு கல்வி பற்றிய அக்கறை அதிகமாக இருக்கும். மாணவர்களுக்கு விளையாட்டு துறையில் சாதிக்கும் வாய்ப்பு உண்டாகும். இறைவழிபாட்டின் ஆனந்தம் கூடும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிய வேண்டும் ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். அப்படியே விஷ்ணுபகவான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த செயலையும் செய்ய வேண்டும் கண்டிப்பாக முன்னேற்றம் உண்டாகும். உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை தெற்கு. அதிர்ஷ்ட எண் 6 மற்றும் 9. அதிர்ஷ்ட நிறம் ஆரஞ்சு மற்றும் சிவப்பு நிறம்.