Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

நாளைய (23-09-2020) நாள் எப்படி இருக்கும்..? இதோ உங்கள் ராசிக்கு..!

நாளைய  பஞ்சாங்கம்

23-09-2020, புரட்டாசி 07, புதன்கிழமை, சப்தமி திதி இரவு 07.57 வரை பின்பு வளர்பிறை அஷ்டமி.

கேட்டை நட்சத்திரம் மாலை 06.25 வரை பின்பு மூலம்.

சித்தயோகம் மாலை 06.25 வரை பின்பு மரணயோகம்.

நேத்திரம் – 1.

ஜீவன் – 1/2.

திருக்கணித ராகு-கேது பெயர்ச்சி காலை 8.22.

 

இராகு காலம் மதியம் 12.00-1.30,

 எம கண்டம் காலை 07.30-09.00,

 குளிகன் பகல் 10.30 – 12.00,

 சுப ஹோரைகள் காலை 06.00-07.00, காலை 09.00-10.00,  மதியம் 1.30-2.00,  மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00,  11.00-12.00

 

நாளைய ராசிப்பலன் –  23.09.2020

மேஷம்

உங்களின் ராசிக்கு உடல் நிலையில் பாதிப்பு ஏற்படும். எந்த செயல் செய்தாலும் தடை உண்டாகும்.சந்திராஷ்டமம் உங்கள் ராசியில் இருப்பதால் சிவ காரியங்களை தவிர்த்து விடுங்கள் அதுவே நல்லது. தொழிலில் நிதானம் கொள்ளுங்கள். வீண் பேச்சை தவிர்க்கவும்.

ரிஷபம்

ரிஷபம் ராசிக்கு பணப்புழக்கம் அதிகரிக்கும். வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்க கூடும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியை தரும். எந்த வேலை செய்தாலும் சுறுசுறுப்புடன் இருப்பீர்கள். புதிய தொழில் செய்யும் திட்டம் நிறைவேறும். வெளியூர் செல்வதை தவிர்க்கவும்.

மிதுனம்

உங்களின் ராசிக்கு வீட்டில் மகிழ்ச்சியான செய்தி உண்டாகும். தொழிலில் புதிய வாய்ப்பு கிடைக்கும். புதிய பொருட்களை வாங்க ஆர்வம் கூடும். நண்பர்கள் உதவியாக இருப்பார். உடன் பிறந்தவர்களிடம் இருந்த கருத்துவேறுபாடு அகலும். சுப காரியங்கள் கை கூடும்.

கடகம்

உங்களின் ராசிக்கு குழந்தைகள் மூலம் சுப செலவு உண்டாகும். தொழில் செய்பவர்களுக்கு தொழிலில் நல்ல மாற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் புது முயற்சிகளால் அனுகூலம் கிடைக்கும். பணக்கஷ்டம் நீங்கும். தெய்வ பக்தி பெருகும். பொன்னும் பொருளும் சேரும்.

சிம்மம்

உங்களின் ராசிக்கு எந்த செயல் செய்தாலும் ஒரு முறைக்கு பல முறை யோசித்து செய்யுங்கள் அதுவே நல்லது. குடும்பத்தில் பெரியவர்களை ஒத்துழைத்து செல்லுங்கள் அதுவே உத்தமம். பூர்வீக சொத்துக்களின் மூலம் அலைச்சலும் டென்ஷனும் உண்டாகும். வேற்றுமொழி நபர்களால் உதவி கிடைக்க வாய்ப்பு.

கன்னி

உங்களின் ராசிக்கு குழந்தைகளிடம் இருந்த மனஸ்தாபங்கள் அனைத்தும் நீங்கும். எந்த செயல் செய்தாலும் வெற்றி கிடைக்கும். உடல்நலம் சீராக இருக்கும். பெரியவர்களின் ஆதரவு கிடைக்கும். வீட்டில் பெண்கள் சிக்கனமாக இருப்பார்கள். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். பொன் பொருள் சேரும்.

துலாம்

உங்களின் ராசிக்கு வீட்டில் மகிழ்ச்சி ஏற்ற சூழ்நிலை உண்டாகும். வீண் செலவுகளால் சேமிப்புகள் நேரும். நண்பர்களுடன் தேவையற்ற மனஸ்தாபம் ஏற்படும்.உடனிருப்பவர்களை அனுசரித்து செல்லுங்கள் அதுவே நல்லது. விடாமுயற்சியால் தொழிலில் வெற்றி கிடைக்கும்.

விருச்சிகம்

உங்களின் ராசிக்கு நினைத்த காரியங்கள் அனைத்தும் நிறைவேறும். எந்த செயல் செய்தாலும் முழு ஈடுபாடு காட்டுவீர்கள்.உறவினர்கள் உங்களின் முயற்சிக்கு ஒத்துழைப்பு கொடுப்பார்கள். தொழில் சம்பந்தமான வெளியூர் பயணங்களால் நற்பலன்கள் கிடைக்க கூடும். வீட்டுத் தேவை அனைத்தும் பூர்த்தியாகும்.

தனுசு

உங்களின் ராசிக்கு எதிர்பாராத பிரச்சனை உண்டாகும். உடன் பிறந்தவர்களிடம் ஒற்றுமை குறையும். தொழிலில் பணிச்சுமை அதிகரிக்கும். உறவினர்கள் உதவி கிடைக்கும்.மதிநுட்பத்துடன் செயல்படுவதால் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். தெய்வ ஈடுபாடு பெருகும்.

மகரம்

உங்களின் ராசிக்கு தொழிலில் உடன் இருப்பவர்களால் லாபம் கிடைக்கும். வீட்டில் இருந்த மனஸ்தாபம் அனைத்தும் விலகும். நண்பர்களின் உதவியால் கடன் தொல்லை நீங்கும். வீட்டில் சுபகாரிய முயற்சி கைகொடுக்கும். உடல்நிலை சீராக இருக்கும். வெளியில் கொடுத்த கடன் அனைத்தும் வசூலாகும்.

கும்பம்

உங்களின் ராசிக்கு வீட்டில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உடன்பிறந்தவர்களின் ஆதரவும் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களால் லாபம் உண்டாகும். தொழிலில் புதிய கூட்டாளிகள் இணைய வாய்ப்பு இருக்கு.உத்தியோகத்தில் உடன் இருப்பவர்கள் சாதகமாக  செயல்படுவார். பணவரவு சிறப்பாக அமையும்.

மீனம்

உங்களின் ராசிக்கு வெளி பயணங்களால் உடல் சோர்வு, மன உளைச்சல் உண்டாகும். தேவையற்ற வீண் விரயங்கள் ஏற்படும். தொழிலில்  இருந்த பொறாமை அனைத்தும் நீங்கும். பெரியவர்களின் ஆற்றலால் வியாபாரத்தில் புது புது மாற்றம் உண்டாகும்.

Categories

Tech |