கன்னி ராசி அன்பர்களே..!
வேலைகளை சிரமம் இல்லாமல் செய்து முடிப்பீர்கள்.
உங்களின் வாழ்க்கையை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்துச் சென்று கொள்கைகள். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன்கள் வரக்கூடும். மதிப்பு மட்டும் மரியாதை இன்று கூடும். பெண்களுக்கு இன்றைய நாளில் முன்னேற்றமான தருணங்கள் ஏற்படும். வேலை செய்யக்கூடிய பெண்களுக்கு நல்ல தருணங்கள் உண்டாகும். காதலில் வயப்படக்கூடிய சூழல் உண்டாகும். வசீகரமான தோற்றமும் வெளிப்படும். லாக்டோன் பிரச்சனை இருப்பதினால் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும். முக கவசம் அணிந்து செல்லவேண்டும்.
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான பலன்கள் கிடைக்கும். கடுமையான உழைப்பிற்கு இன்று வெற்றிப்பெறும் நாளாக இருக்கும். வேலைப்பளு அதிகரிக்கும். ஆனால் அதற்கேற்ற வருமானம் கிடைக்கும். உடல் சோர்வு ஏற்பட்டாலும், மனம் உற்சாகமாக செயல்படும். உயரதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். உற்சாகமாக எதிலும் செயல்படுவீர்கள். கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரித்து மகிழ்ச்சிக்கு குறையில்லாமல் இருக்கும். குடும்பத்திற்கு வேண்டியதை செய்துக் கொடுப்பீர்கள். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது கருநீல நிறத்தில் ஆடை அணியவேண்டும். கருநீல நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அப்படியே அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு இன்றைய நாளை தொடங்குங்கள் இன்றையநாள் சிறப்பாக இருக்கும்.
அதிர்ஷ்டமான திசை: வடக்கு.
அதிர்ஷ்டமான எண்: 2 மற்றும் 7.
அதிர்ஷ்டமான நிறம்: கருநீலம் மற்றும் பச்சை நிறம்.