Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

தனுசு ராசிக்கு…! மதிப்பு உண்டாகும்..! அக்கறை கூடும்..!!

தனுசு ராசி அன்பர்களே..!
இன்று அலுவலகத்தில் உங்களுக்கு நல்லப்பெயர் கிடைக்கும்.

சக ஊழியர்கள் உங்களின்மீது மரியாதை கொள்வார்கள். நீங்கள் நினைத்தது நடக்கும் நாளாக இருக்கும். குடும்பத்தினரும் உங்களை மதித்து நடப்பார்கள். ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. உணவு விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். தேவையற்ற வீண்பழி உண்டாகும். சில நபர்கள் உங்களை தூண்டும் வகையில் பேசுவதால் நீங்கள் கோபத்திற்கு உள்ளாக்கப்படுவீர்கள். லாக்டோன் பிரச்சனை இருப்பதினால் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும். முக கவசம் அணிந்து செல்லவேண்டும்.

நேர்மையான எண்ணங்கள் மேலோங்கும். மேலதிகாரிகளின் கெடுபிடிக்கு ஆளாக நேரிடும். பயணங்களின் பொழுது பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். பழைய வீட்டை புதுப்பிக்கக்கூடிய எண்ணங்கள் மேலோங்கும். இன்று காதலில் உள்ளவர்களுக்கும் நிதானமான போக்கு வெளிப்படும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது இளம்பச்சை நிறத்தில் ஆடை அணியவேண்டும். இளம்பச்சை உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அப்படியே அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள், இன்றைய நாள் சிறப்பாக இருக்கும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு.
அதிர்ஷ்டமான எண்: 2 மற்றும் 7.
அதிர்ஷ்டமான நிறம்: இளம் பச்சை மற்றும் நீல நிறம்.

Categories

Tech |