ரிஷபம் ராசி அன்பர்களே..!
இன்று வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டாகும்.
பெண்கள் மூலம் முன்னேற்றமான சூழ்நிலை அமையும். கௌரவம் மற்றும் அந்தஸ்து உயரும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வீண் அலைச்சலைத் தவிர்க்க வேண்டும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். மன தைரியம் உண்டாகும். எடுத்த காரியங்கள் நல்லபடியாக நடந்துமுடியும். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் கூடும். இன்று பிரச்சனைகள் இல்லாத நாளாக இருக்கும். பணவரவு சீராக இருக்கும். தேவையற்ற இடமாற்றங்கள் உண்டாகும். உயரதிகாரிகளிடம் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ளுங்கள். லாக்டோன் பிரச்சனை இருப்பதினால் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும். முக கவசம் அணிந்து செல்லவேண்டும்.
கருத்துக்கள் சொல்வதில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இன்று தெய்வபக்தி கூடும். கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் நல்லதே உண்டாகும். புதிய முயற்சிகளில் வெற்றிகள் உண்டாகும். தொழிலை விரிவுபடுத்தக்கூடிய எண்ணங்கள் மேலோங்கும். வாகனம் வாங்ககூடிய யோகம் உண்டாகும். இன்று காதலில் உள்ளவர்களுக்கு நல்ல நாளாக இருக்கும். மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெளிர் நீல நிறத்தில் ஆடை அணியவேண்டும். வெளிர் நீலம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அப்படியே இன்று நீங்கள் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னம் வைத்து வாருங்கள், உங்களுக்கு நல்ல பலனை பெற்றுக் கொடுக்கும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு.
அதிர்ஷ்டமான எண்: 4 மற்றும் 9.
அதிர்ஷ்டமான நிறம்: வெளிர் நீலம் மற்றும் சிவப்பு நிறம்.