சிம்மம் ராசி அன்பர்களே..!
பணிகளில் நம்பிக்கையுடன் ஈடுபடுவீர்கள்.
தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி நிலை அதிகரிக்கும். குடும்பத்தில் ஒற்றுமை மகிழ்ச்சியளிக்கும். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை தோன்றலாம். பிள்ளைகளுடன் பேசும் பொழுது எச்சரிக்கையுடன் நடந்துகொள்ளுங்கள். உழைப்பிற்கான ஊதியம் சற்று குறைவாக கிடைக்கும். மாலை நேரத்தில் சந்தோசமான செய்திகள் இல்லம் தேடிவரும். திருமணத்திற்காக காத்திருந்தவர்களுக்கு நல்ல தருணங்கள் வரக்கூடும். வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். காதலில் உள்ளவர்களுக்கு சுமூகமான சூழல் உண்டாகும். லாக்டோன் பிரச்சனை இருப்பதினால் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும். முக கவசம் அணிந்து செல்லவேண்டும்.
முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெளிர் பச்சை நிறத்தில் ஆடை அணியவேண்டும். வேலைக்கு பச்சை உங்களுக்கு அதிர்ஷ்டத்தயே கொடுக்கும். அப்படியே சூரியபகவான் வழிபாட்டையும் ஆஞ்சநேயர் வழிபாட்டையும் மேற்கொண்டு வாருங்கள், இன்றைய நாள் சிறப்பான நாளாக இருக்கும். அதிர்ஷ்டமான திசை: தெற்கு. அதிர்ஷ்டமான எண்: 5 மற்றும் 6. அதிர்ஷ்டமான நிறம்: வெளிர் பச்சை மற்றும் ஆரஞ்சு நிறம்.