மகரம் ராசி அன்பர்களே…! வேலைப்பளு இன்று உங்களுக்கு அதிகரிக்கும்.
திட்டமிட்ட பயணத்தில் திடீர் மாற்றம் உண்டாகும். லாக்டோன் பிரச்சினை முடிந்தவுடன் ஏதாவது செய்யலாமா என்ற எண்ணம் மேலோங்கும். இறை வழிபாட்டில் நம்பிக்கை வேண்டும். புத்தி சாதுர்யத்தை வெளிப்படுத்த வேண்டும். எதையும் சமாளிக்க முடியும் என்ற நம்பிக்கை வைக்க வேண்டும். நினைத்தபடி அனைத்தும் நடக்கும். மற்றவர்கள் உங்கள் மீது பொறாமை படுவார்கள். நீங்கள் படும் கஷ்டம் உங்களுக்கு மட்டும் தெரியும். மகரம் ராசி காரர்கள் அன்புக்கு சொந்தக்காரர்கள். உத்தியோக வேலை யாரிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டாம். லாக்டோன் பிரச்சினை முடிந்தவுடன் எதையும் ஆரம்பிக்க வேண்டும். பழைய பாக்கி வசூல் செய்வதில் தாமத நிலை உண்டாகும்.
சத்தான ஆகாரம் கண்டிப்பாக முக்கியம். கணவன் மனைவிக்குள் பிரச்சனை இல்லை. காதலில் உள்ளவர்களுக்கு இனிமை காணும் நாள். மாணவர்களுக்கு படிப்பின் மீது அக்கறை ஏற்படும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது ஊதா நிறத்தில் ஆடை அணிய வேண்டும் ஊதா நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். அப்படியே சூரியபகவான், ஆஞ்சநேயர் வழிபாட்டை மேற்கொண்டு வந்தால் நல்லது நடக்கும். உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை கிழக்கு. அதிர்ஷ்ட எண் ஒன்று மட்டும் 7. அதிர்ஷ்ட நிறம் ஊதா மற்றும் நீல நிறம்.