கும்பம் ராசி அன்பர்களே…! முன்னேற்றம் காண முயற்சி எடுக்க வேண்டும்.
லாக்டோன் பிரச்சனை இருப்பதினால் அதற்கு ஏற்றார்போல் வாழ்க்கையை நகர்த்தி செல்ல வேண்டும். நடக்க வேண்டிய விஷயங்கள் தானாக நடக்கும். கடன் பிரச்சினையை சமாளித்துக் கொள்வீர்கள். இன்றைய நாள் சுகமாக இருக்கும். உடன்பிறப்புகள் இடம் கேட்கும் உதவி கண்டிப்பாக நடக்கும். உடன்பிறப்புகள் உதவி செய்ய முன் வருவார்கள். பூர்வீக சொத்துக்களால் பிரச்சினை சரியாகும். பாகப்பிரிவினை சுமுகமாக நடக்கும். வெளிவட்டாரப் பழக்க வழக்கம் விரிவடையும். திடீர் கோபம் உண்டாகும். கோபத்தை கட்டுப்படுத்த வேண்டும். நல்லது கெட்டது பார்த்து செயல்பட வேண்டும். தெளிவான சிந்தனை தோன்றும்.
காதலில் உள்ளவர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மாணவர்களுக்கு இன்று துணிச்சல் உண்டாகும். பெற்றோரிடம் கோபமான சூழல் உண்டாகும். வீண் வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம்.முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிய வேண்டும். வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். அப்படியே சூரிய பகவான், ஆஞ்சநேயர் வழிபாட்டை மேற்கொண்டு வந்தால் நல்லது நடக்கும். உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை தெற்கு. அதிர்ஷ்ட எண் 1 மற்றும் 5. அதிர்ஷ்ட நிறம் மஞ்சள் மற்றும் வெள்ளை நிறம்.