கும்பம் ராசி அன்பர்களே…! குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும்.
தொழில் வியாபாரம் நல்லபடியாக இருக்கும்.லாக்டோன் பிரச்சினை முடிந்தவுடன் தொழில் வளர்ச்சி அடையும். தேவைக்காக பணத்தை கடன் வாங்கும் சூழல் உருவாகும். கண்களுடைய பாதுகாப்பில் கவனம் வேண்டும். கூர்மையான பொருட்களை கையாளும் பொழுது கவனம் வேண்டும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். பயணம் மூலம் அனுகூலம் ஏற்படும். எச்சரிக்கையாக பேசுவது எப்பொழுதும் நல்லது. உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிக்க உதவி கிடைக்கும். கொடுக்கல் வாங்கலில் கவனம் வேண்டும். கும்பம் ராசி காரர்களுக்கு இனிமை காணும் நாள் இன்று. உள்ளத்தில் மகிழ்ச்சி ஏற்படும்.மனதிற்கு பிடித்தவரை கரம்பிடித்த சூழல் உருவாகும்.
காதலில் உள்ளவர்களுக்கு இனிமையான நாளாக இருக்கும். மாணவர்களுக்கு இன்று துணிச்சல் கூடும் நாள். கல்வியில் அக்கறை அதிகமாக இருக்கும்.முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது ஊதா நிறத்தில் ஆடை அணிய வேண்டும். ஊதா நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். அப்படியே சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு வந்தால் நல்லது நடக்கும். உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடக்கு. அதிர்ஷ்ட எண் 3 மற்றும் 5.அதிர்ஷ்ட நிறம் ஊதா மட்டும் மஞ்சள் நிறம்.