துலாம் ராசி அன்பர்களே…! திட்டமிட்ட செயலை நிறைவேற்றுவதில் குறிக்கோள் இருக்கும்.
குடும்பத்திற்கு வேண்டியதை வாங்கிக் கொடுப்பீர்கள்.குடும்ப உறுப்பினர்களை சந்தோஷப்படுத்துவது எண்ணம் போகும். எடுக்கும் முயற்சியில் சாதக பலன் கிடைக்கும். காரியத்தை சிறப்பாக முடிப்பதில் வல்லமை உடையவர்கள். நிர்வாகத்திறமை சிறப்பாக இருக்கும். தொழில் வியாபாரம் நல்லபடியாக நடக்கும். நினைத்ததை விட கூடுதலாக உழைக்கும் வாய்ப்பு உருவாகும். உழைப்புக்கேற்ற நல்ல பலன் கிடைக்கும். இல்லத்தில் அதிகப்படியான பணிச்சுமையை இருக்கும். பணவரவுக்கு குறைவு இல்லை.மந்தமான போக்கு சில விஷயங்களில் ஏற்படும். உடலை சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ளுங்கள். லாக்டவுன் பிரச்சனை இருப்பதால் தேவை இல்லாமல் வெளி பயணத்தை தவிர்க்கவும். முக கவசம் அணிந்து கொண்டு செல்லுங்கள்.
கணவன்-மனைவி இடையே அன்பு இருக்கும். காதலில் கவனம் வேண்டும். மாணவர்களுக்கு சிந்தனைத் திறன் சிறப்பாக இருக்கும். கல்வி பற்றிய அக்கறை ஏற்படும்.முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிய வேண்டும். ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.அப்படியே முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு வந்தால் வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை தெற்கு. அதிர்ஷ்ட எண் 3 மற்றும் 9. அதிர்ஷ்ட நிறம் ஆரஞ்சு மட்டும் வெள்ளை நிறம்.