Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கடகம் ராசிக்கு…! முன்கோபத்தை தவிர்க்க வேண்டும்..! நிதானம் தேவை..!!

கடகம் ராசி அன்பர்களே..!
இன்று திட்டமிட்டு பணியில் ஈடுபட வேண்டும்.

காரியங்களை உடனடியாக செய்து முடிக்க முயற்சிகளை மேற்கொள்வீர்கள். தடைகள் உண்டாகும். இன்று சந்திராஷ்டமம் இருப்பதால் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். சரியான நேரத்திற்கு உணவு எடுத்துக்கொள்ள வேண்டும். ஆரோக்கியத்தை பாதுகாக்க வேண்டும். செயல்களில் அதிக முயற்சிகள் தேவைப்படும். வாகனத்தில் செல்லும் பொழுது நிதானமாக இருக்க வேண்டும். யாரை நம்பியும் என்று பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். ஜாமீன் கையெழுத்து எதுவும் போட வேண்டாம். வாக்குறுதிகள் கொடுக்க வேண்டாம்.

முன்கோபத்தைத் தவிர்க்க வேண்டும். பயணங்களைத் தவிர்க்க வேண்டும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் ஆயுதங்களை பயன்படுத்தும் பொழுது கவனம் வேண்டும். திறமைகள் வெளிப்படும். தேவையில்லாத பிரச்சினைகளில் தலையிட வேண்டாம். எதிரிகளின் தொல்லைகள் பெருகும். இன்றைய நாளை இறை வழிபாட்டுடன் தொடங்கவேண்டும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெளிர் நீல நிறத்தில் ஆடை அணியவேண்டும். வெளிர் நீலம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அப்படியே முருகப்பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள், இன்றைய நாள் சிறப்பாக இருக்கும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு.
அதிர்ஷ்டமான எண்: 2 மற்றும் 7.
அதிர்ஷ்டமான நிறம்: வெளிர் நீலம் மற்றும் சிவப்பு நிறம்.

Categories

Tech |