மிதுனம் ராசி அன்பர்களே…!
இன்று போக்குவரத்தில் கண்டிப்பாக கவனத்தை பின்பற்ற வேண்டும்.
குழந்தைகளுக்கு மருத்துவ கவனிப்பு தேவைப்படும். எவ்வளவு திறமையுடன் செயல்பட்டாலும், உங்களுடைய திறமை பாராட்டுகள் பெறுவதில் சிக்கல்கள் இருக்கும். பொதுவாக நண்பர்களிடம் கொஞ்சம் நல்லபடியாக நடந்துக் கொள்ளுங்கள். அவர்களைப் பற்றிய குறைகள் ஏதும் சொல்ல வேண்டாம். வியாபார விஷயங்களில் ரொம்ப கவனமாக நடந்து கொள்ள வேண்டும். சிலரைப்பற்றி சிலர் விமர்சனங்கள் செய்தாலும், அதைப் பற்றி எல்லாம் நீங்கள் காதில் வாங்காமல் உங்கள் வேலை உண்டு இருப்பது நல்லது. புதிய ஆர்டர்கள் கிடைக்க பெறுவதில் சிக்கல்கள் இருக்கும். கடுமையான போராட்டங்கல் நிகழும். வியாபார வளர்ச்சிக்கு தகுந்த நபர்கள் உதவிகளைச் செய்தாலும், தடைகளை தாண்டித்தான் முன்னேறிச் செல்ல வேண்டியிருக்கும். பழைய பாக்கிகள் ஓரலவே வசூலாகும். அரசாங்கம் தொடர்பான விஷயங்கள் சாதகமாக முடியும். உத்தியோகத்தில் பதவி உயர்வு உண்டாகும். நீண்டதூரப் பயணங்களால் காரியத்தில் அனுகூலம் இருக்கும், ஆனால் பயணங்களின் பொழுது உடைமைகள் மீது கவனம் இருக்கட்டும்.
விலை உயர்ந்த பொருட்களை கையாளும் பொழுது கவனமாக இருங்கள். இன்று காதலர்கள் எந்த விதத்திலும் பேச்சுவார்த்தையில் மிக முக்கியமாக கோபப்படாமல் இருக்க வேண்டும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை யே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் ஒரு ரொம்ப நல்லபடியாகவே நடந்து முடியும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு.
அதிர்ஷ்டமான எண்: 2 மற்றும் 6. அதிர்ஷ்டமான நிறம்: வெள்ளை மற்றும் நீல நிறம்.