துலாம் ராசி அன்பர்களே..!
இன்று நீங்கள் விரும்பும் பலன் பெற இது சாதகமான நாள். முக்கிய முடிவுகள் எடுக்க உகந்த நாள். இன்று மகிழ்ச்சியுடன் இருப்பீர்கள். தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள்.
கடினமான பணிகளை விரைந்து முடிப்பீர்கள். இன்று உங்களின் திறமையின்மீது நீங்கள் கொண்டுள்ள நம்பிக்கை மூலம் இது சாத்தியமாகும். இன்று உங்களின் துணையுடன் சுமூகமான உறவு காண்பீர்கள். இதன் மூலம் உங்களின் துணையின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். பூர்வீக சொத்து வகையில் பணவரவு காணப்படும். கணிசமான தொகை சேமிக்கும் வாய்ப்பும் உள்ளது. இன்று உங்களிடம் சிறந்த ஆற்றல் காணப்படும். நீங்கள் உடல் மற்றும் மன ஆரோக்கியத்துடன் காணப்படுவீர்கள்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு.
அதிர்ஷ்டமான எண்: 9.
அதிர்ஷ்டமான நிறம்: மஞ்சள் நிறம்.