கடகம் ராசி அன்பர்களே…!
இன்று சுக சௌகரியத்திற்கு பங்கு விளையும்.
எதிர்பார்த்த இடங்களில் பணவரவு தாமதப்பட்டுத்தான் வந்து சேரும். எதையும் சாதிக்கும் திறமை இருக்கும். செலவுகள் அதிகரிக்கும். உறவினர் வருகை இருக்கும். யாரிடம் பேசும்பொழுதும் நிதானமாக பேசுவது நன்மையை கொடுக்கும். எதிலும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். திட்டமிட்டுத்தான் எந்த ஒரு காரியத்திலும் ஈடுபட வேண்டும். இன்று மாணவர்களுக்கு உயர்கல்வி தொடர்பான சந்தேகங்களை மற்றவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். கல்வியில் இருந்த பயம் விலகி செல்லும். இன்று யாரிடமும் பேச்சுவார்த்தையில் ஈடுபடும் பொழுது கோபங்கள் மட்டும் வேண்டாம்.அதேபோல கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் ரொம்ப நிதானமாக செயல்படுங்கள். மற்றவர்களுக்கு பணம் கொடுக்கும் பொழுதும் சரி, நீங்கள் பணம் வாங்கும் போதும் சரி என்னி பார்த்து வாங்குங்கள்.
அதே போல் யாரையும் தயவுசெய்து இன்று குறைகள் எதுவும் சொல்ல வேண்டாம். குடும்பத்தாரின் ஒத்துழைப்பு கிடைத்தாலும் உறவினர் வருகை இருந்தாலும், செலவை எப்படி நீங்கள் கட்டுப்படுத்த போகிறீர்கள் என்பதை முன்கூட்டியே யோசித்துக் கொள்ளுங்கள். இன்று யாரை நம்பியும் எந்தவித பொறுப்புகளையும் ஒப்படைக்காதீர்கள். மாலை நேரத்தில் நடைபயிற்சியை எப்பொழுதும் மேற்கொள்ளுங்கள். உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுங்கள்.இன்ற முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது நீல நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. நீல நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அது மட்டுமில்லாமல் இன்று அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள், காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்லபடியாகவே நடந்து முடியும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு.
அதிர்ஷ்டமான எண்: 2 மற்றும் 7. அதிர்ஷ்டமான நிறம்: நீலம் மற்றும் பச்சை நிறம்.