இன்றைய பஞ்சாங்கம்
25-09-2020, புரட்டாசி 09, வெள்ளிக்கிழமை, நவமி திதி மாலை 06.44 வரை பின்பு வளர்பிறை தசமி.
பூராடம் நட்சத்திரம் மாலை 06.31 வரை பின்பு உத்திராடம்.
பிரபலாரிஷ்ட யோகம் மாலை 06.31 வரை பின்பு சித்தயோகம்.
நேத்திரம் – 2.
ஜீவன் – 1/2.
அம்மன் வழிபாடு நல்லது.
தனிய நாள்.
புதிய முயற்சிகளையும் பயணங்களையும் தவிர்க்கவும்.
இராகு காலம் – பகல் 10.30-12.00,
எம கண்டம்- மதியம் 03.00-04.30,
குளிகன் காலை 07.30 -09.00,
சுப ஹோரைகள் – காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00, மாலை 05.00-06.00, இரவு 08.00-10.00
இன்றைய ராசிப்பலன் – 25.09.2020
மேஷம்
உங்களின் ராசிக்கு வீட்டில் சுப செய்தி கிடைக்கப்பெற்று மன மகிழ்ச்சி உண்டாகும். எந்த முயற்சி எடுத்தாலும் நல்ல முன்னேற்றம் காண்பீர். தொழிலில் இருந்த பிரச்சனைகள் விலகும். தொழிலில் வெளியூர் பயணங்களால் அனுகூலம் உண்டாகும். வருமானம் பெருகும்.
ரிஷபம்
உங்களின் ராசிக்கு எந்த செயல் செய்தாலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். மருத்துவ செலவு உண்டாகும்.சந்திராஷ்டமம் உங்கள் ராசியில் இருப்பதால் மற்றவர்களின் வீன் பேச்சுக்கு ஆளாகக் கூடும். முகம் தெரியாதவர்களிடம் தேவையில்லாத பேச்சைக் குறையுங்கள். புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.
மிதுனம்
உங்களின் ராசிக்கு குழந்தைகள் மூலம் பெருமை உண்டாக கூடும். அரசு ரீதியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். ஆடம்பரப் பொருட்களை வாங்கும் ஆர்வம் கூடும். சக ஊழியர்களிடம் இருந்து அனுகூலம் கிட்டும். உத்தியோக ரீதியில் புதிய கருவிகளை வாங்கும் வாய்ப்பு கூடும்.
கடகம்
உங்களின் ராசிக்கு வருமானம் கூடும். பணப் பிரச்சனை நீங்கும். உத்யோகத்தில் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.தொழில் செய்பவர்களுக்கு மேலதிகாரிகளிடம் இருந்து பாராட்டு கிடைக்கும். வீட்டில் இருந்த பிரச்சனை நீங்கும். புதிய பொருட்களை வாங்க ஆர்வம் கூடும்.
சிம்மம்
உங்களின் ராசிக்கு பணவரவு இருக்கும். உற்றார் உறவினர்களிடம் வீண் மனஸ்தாபம் ஏற்படும். தொழிலில் தேவையற்ற பிரச்சனையால் மன உளைச்சல் கூடும். உடன்பிறந்தவர்கள் ஆதரவு கிடைக்கும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவி பெற வாய்ப்பு இருக்கு. தொழிலில் முன்னேற்றம் உண்டாகும்.
கன்னி
உங்களின் ராசிக்கு வீட்டில் தேவையில்லாத பிரச்சனை வரக்கூடும். நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்க தாமதமாகும்.உடன் பிறந்தவர்களிடம் அனுகூலம் உண்டாகும். சிக்கனமாக இருங்கள் அதுவே நல்லது. தொழில் செய்பவர்களுக்கு பணிச்சுமை அகலும்.
துலாம்
உங்களின் ராசிக்கு தொட்ட காரியம் அனைத்தும் வெற்றியைக் கொடுக்கும். தொழிலில் உடனே இருப்பவர்களிடம் ஒற்றுமை கூடும். பணப் பிரச்சனை நீங்கும். சுபகாரியம் முயற்சி நல்ல பலனை கொடுக்கும். தொழிலில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள்.
விருச்சிகம்
உங்களின் ராசிக்கு கடினமாக உழைத்தால் மட்டுமே வெற்றி கிடைக்கும். தொழிலில் நெருக்கடி உண்டாகும். சேமித்த பணம் குறையும். தேவையற்ற ஆடம்பர செலவுகளை குறைப்பது நல்லது.உற்றார் உறவினர்கள் மூலம் கிடைக்கும் உதவியால் மனதிற்கு நிம்மதி கிடைக்கும்.
தனுசு
உங்களின் ராசிக்கு பணவரவு உண்டாகும்.உற்றார் உறவினர் வருகையால் வீட்டில் மகிழ்ச்சியான சூழல் உருவாகும். ஆடை ஆபரணம் வாங்குவதில் ஆர்வம் கூடும். வீட்டில் இருந்தவர்களிடம் இருந்த கருத்துவேறுபாடு அகலும். பெரியவர்களின் நட்பு உண்டாகும்.
மகரம்
உங்களின் ராசிக்கு வரவுக்கு மீறிய செலவு வரும்.உடன்பிறந்தவர்களால் மன கஷ்டம் வரக்கூடும்.புதிய சொத்துக்களை வாங்கும் போது சிந்தித்து செயல்படுங்கள். உத்தியோகத்தில் எதிரிகளால் இருந்த பிரச்சனை தீரும். தெய்வ வழிபாடு மேற்கொள்வீர்கள்.
கும்பம்
உங்களின் ராசிக்கு வீட்டில் ஒற்றுமையான சூழ்நிலை உருவாகும். உடல்நிலை சீராக இருக்கும். தொழிலில் புதிய பதவி தேடி வரக்கூடும். நண்பர்களிடம் இருந்து எதிர்பார்த்த உதவி கிடைக்கும். உத்தியோகத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வங்கியில் சேமிப்பு கூடும்.
மீனம்
உங்களின் ராசிக்கு உற்றார் உறவினர்களிடம் இருந்து நல்ல செய்தி வந்து சேரும். குழந்தைகளின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வீட்டுத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். உத்தியோக ரீதியில் வெளியூர் பயணம் செல்ல நேரிடும். புதிய பொருட்களை வாங்க ஆர்வம் கூடும். சுப செலவு அதிகரிக்கும்.