கடகம் ராசி அன்பர்களே..!
இன்று சம்பந்தமில்லாத வேலையில் ஈடுபட வேண்டாம்.
தொழில் வியாபாரத்தில் கடுமையான போட்டிகள் இருக்கும். நேரத்திற்கு உணவை உட்கொள்ளுங்கள். சேமிப்பு பணம் முக்கியச் செலவுக்கு பயன்படும். மனதிற்குப் பிடித்த பொருட்களை வாங்கக்கூடும். சொகுசான வாழ்க்கையை மேற்கொள்ள நினைப்பீர்கள். புதிதாக வீடு கட்டக்கூடிய யோகம் உண்டாகும். வெளியூர் பயணங்களால் மறக்கமுடியாத தருணங்கள் உண்டாகும். இன்று உங்களுக்கு அனைத்து விஷயங்களிலும் வெற்றி உண்டாகும். மனதை ஒருநிலைப்படுத்த வேண்டும்.
தேவையில்லாத குழப்பத்திற்கு இடங்கொடுக்க வேண்டாம். எந்தவொரு விஷயத்திலும் முடிவெடுப்பதற்கு முன் பெரியவர்களிடம் ஆலோசிக்க வேண்டும். மனமகிழ்ச்சி அடையும். மாணவர்களின் ஞாபகத்திறன் அதிகரிக்கும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது இளஞ்சிவப்பு நிறத்தில் ஆடை அணியவேண்டும். இளஞ்சிவப்பு உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அப்படியே சூரியபகவான் வழிபாட்டையும் ஆஞ்சநேயர் வழிபாட்டையும் மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அன்னதான கொடுங்கள், இன்றையநாள் நல்ல நாளாக இருக்கும்.
அதிர்ஷ்டமான திசை: வடக்கு.
அதிர்ஷ்டமான எண்: 5 மற்றும் 7.
அதிர்ஷ்டமான நிறம்: இளஞ்சிவப்பு மற்றும் நீல நிறம்.