சிம்மம் ராசி அன்பர்களே..!
இன்று உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும்.
பணம் பல வழியில் தேடி வந்துச்சேரும். தனவரவு தாராளமாக இருக்கும். சேமிப்பதற்கு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். ஆடை மற்றும் ஆபரணங்கள் வாங்கக்கூடிய யோகம் இருக்கும். மற்றவர்களுடன் வெளியிடங்களுக்குச் சென்று பொழுதை கழிப்பீர்கள். ஆன்மீகத்தில் நாட்டம் செல்லும். தெய்வீக நம்பிக்கை கூடும். உறவினர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது. பக்தியில் நாட்டம் ஏற்படும். கடன் பிரச்சினையிலிருந்து விடுபடுவீர்கள். எதிர்ப்புகள் விலகிச் செல்லும். நீண்ட நாட்களாக இருந்துவந்த பிரச்சனைகள் சரியாகும். மனதை ஒருநிலைப்படுத்துவீர்கள்.
மற்றவர்களின் பாராட்டைப் பெறுவீர்கள். இன்று வசீகரமான தோற்றத்தால் அனைவரையும் கவர்வீர்கள். எதிரிகள் உங்களைவிட்டு விலகிச்செல்வார்கள். கொடுத்த வாக்கை நிறைவேற்றுவீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணியவேண்டும். வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அப்படியே சூரிய பகவான் வழிபாட்டையும் ஆஞ்சநேயர் வழிபாட்டையும் மேற்கொண்டு வாருங்கள், இன்றைய நாள் சிறப்பாக இருக்கும்.
அதிர்ஷ்டமான திசை: கிழக்கு.
அதிர்ஷ்டமான எண்: 2 மற்றும் 8.
அதிர்ஷ்டமான நிறம்: வெள்ளை மற்றும் நீல நிறம்.