மகரம் ராசி அன்பர்களே..!
இன்று நீங்கள் பிறருடன் பழகும் பொழுது கவனமாக பழகவேண்டும். சிறிதளவு பழிர்ச்சயமானவர்களிடம் இன்று தவறான புரிந்துணர்வு ஏற்படும் வாய்ப்புகள் உள்ளது.
தேவையற்ற விளைவுகளை தவிர்க்க நீங்கள் உங்களின் வார்த்தைகளில் கவனம் செலுத்த வேண்டும். பணியிடச்சூழல் மகிழ்ச்சிகரமாக இருக்காது. நற்பலன்களை காண நீங்கள் முறையாக திட்டமிட்டு பணியாற்ற வேண்டும். நீங்கள் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் இருப்பீர்கள். இதனை உங்களின் துணையிடம் வெளிப்படுத்துவீர்கள். இதனால் இருவருக்கும் இடையேயான உறவுமுறை பாதிக்கும். எந்த ஒரு விஷயத்தையும் லேசாக எடுத்துக்கொண்டு மனம் திறந்து பேசுவதன் மூலம் பிரச்சனைகளை தீர்க்கலாம். இன்று தேவையற்ற செலவுகள் காணப்படும். அதிகப்பணம் சம்பாதிப்பதும் குறைவாகவே இருக்கும். உடற்பயிற்சி மூலம் திடமாக இருப்பீர்கள். பிரார்த்தனை மற்றும் மனஅமைதி உங்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
அதிர்ஷ்டமான திசை: கிழக்கு.
அதிர்ஷ்டமான எண்: 2.
அதிர்ஷ்டமான நிறம்: சிவப்பு நிறம்.